உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, May 31, 2020

மாவட்டத்தில் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் பணி தீவிரம்





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை  சேர்ந்த டாக்டர் பரணிதரன் மாவட்டத்தில் உள்ள காவல்துறை,பேரூராட்சிகள், தீயணைப்புத்துறை,நகராட்சி,தாலுக்கா அலுவலக பணியாளர்கள்,ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பணியாளர்கள் என பலதரப்பினருக்கும், கொரானோ நோய்த்தடுப்பு பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வரும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அளித்து வருகிறார்.எல்லோரும் இந்த இக்கட்டான நேரத்தில் ஆரோக்கியமாக இருந்து தங்களது பணிகளை சிறப்பாக செய்திடவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் டாக்டர் பரணிதரனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அவரது பணிகளில் சில ...
கடலூர் மத்திய சிறையில் உள்ள 2 கைதிகளுக்கு  கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் சிறையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுவருவதாக சிறை அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக சேத்தியாத்தோப்பை சேர்ந்த மருத்துவர் பரணிதரன் கடலூரை சேர்ந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர் இளந்திரையன் ,   மத்திய சிறை அதிகாரி நிகிலா அவர்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றியும்,ஹோமியோபதி மருத்துவத்தை பற்றி விளக்கி கூறினார்.
மேலும் சிறையில் தற்போதுள்ள 700 கைதிகள்மற்றும் அங்கு பணியாற்றிவரும் சிறை காவலர்கள், பணியாளர்கள்,  அதிகாரிகள் உட்பட 300 நபர்களுக்கான மத்திய ஆயுஷ் அமைச்சகம்
தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய்க்கான  தனி மனித நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம் 30 ஐவழங்கினார்.




வள்ளலார் மகானின் வடலூரில்..
1867 வைகாசி 11 ஆண்டு வள்ளலார் அவர்களால் பசியால் வாடுவோருக்காக திறக்கப்பட்ட  தரும சாலை அணையா அடுப்பு மூலம் இன்றுவரை தினம்தினம் பல்லாயிரம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது.இந்த  சிறப்பான தினத்தில் இந்ந புண்ணிய பூமியில் ஊரடங்கு  காலத்தில் கூட தடையில்லாமல் மூன்று வேளையும் பசியில் வாடும் யாத்ரிகர்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் பணியாளர்கள், அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 200 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்  30 -ஐ  சத்திய ஞான சாலை ஆணையர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தருமசாலையில் தங்கி இருக்கும் யாசர்கள், ஆதாரவற்றோர்களுக்கும்  கொரோனா நோய்க்கான ஹோமியோபதி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

புவனகிரியில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம்

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 70க்கு மேற்பட்ட பல்வேறு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலோடு சிறப்பாக மக்கள் பணியாற்றிடவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்சனிக் ஆல்பம் 30  நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் மருந்தினை புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரனிடம் மருத்துவர் பரணிதரன் வழங்கினார்.மேலும் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம்,, ஒன்றிய துணைத்தலைவர் வாசுதேவன் ஆகியோரிடமும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்துகள் வழங்கப்பட்டது.முன்னதாக ஆர்சனிக் ஆல்பம் 30 பற்றி மருத்துவர் பரணிதரன் அனைவருக்கும் எடுத்துரைத்து,பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் மாத்திரை வழங்கினார்.

டாக்டர் பரணிதரன் தொடர்ந்து தனது கடுமையான பணிகளுக்கு இடையில் பலரையும் சந்தித்து இப்பணியை விடாமல் செய்து வருகிறார்.நீங்களும் உங்களது வாழ்த்துக்களை அவர்க்கு தெரிவிக்கலாமே..