கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பொன்னங்கோவில் கிராமம்.இக்கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறார்கள்.முக்கிய காய்கறியாக வெண்டைக்காயை பயிரிட்டு வந்தாலும் தற்போது போதிய விலை இல்லாமல் வேதனையடைந்து வருகிறார்கள்.தினசரி மாலையில் வெண்டைக்காய் பறிக்கப்பட்டு அதிகாலை காய்கறி கடைகளுக்கு எடுத்துசென்று வியாபாரிகளிடம் கொடுக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் வெண்டைக்காய் கிலோ இருபது ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது கிலோ ஆறுரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.அதிகமாக விளைந்த நிலையிலும் குறைந்த அளவு விலைபோவதால் உழைப்புக்கேற்ற வருமானம் இல்லாமல்போகிறது.தமிழக அரசு இதற்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியில் உள்ளநூற்றுக்கணக்கான வெண்டைக்காய் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் இயல்புநிலைக்கு திரும்பும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
Monday, June 1, 2020
சேத்தியாத்தோப்பு அருகே பொன்னங்கோவில் கிராம விவசாயிகள் வெண்டைக்காய்க்கு அதிக விலை கிடைக்க அரசுக்கு கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பொன்னங்கோவில் கிராமம்.இக்கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறார்கள்.முக்கிய காய்கறியாக வெண்டைக்காயை பயிரிட்டு வந்தாலும் தற்போது போதிய விலை இல்லாமல் வேதனையடைந்து வருகிறார்கள்.தினசரி மாலையில் வெண்டைக்காய் பறிக்கப்பட்டு அதிகாலை காய்கறி கடைகளுக்கு எடுத்துசென்று வியாபாரிகளிடம் கொடுக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் வெண்டைக்காய் கிலோ இருபது ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது கிலோ ஆறுரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.அதிகமாக விளைந்த நிலையிலும் குறைந்த அளவு விலைபோவதால் உழைப்புக்கேற்ற வருமானம் இல்லாமல்போகிறது.தமிழக அரசு இதற்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியில் உள்ளநூற்றுக்கணக்கான வெண்டைக்காய் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் இயல்புநிலைக்கு திரும்பும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...