கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மருதூர் கிராமம்.இக்கிராமத்தில் வள்ளலார் அவதரித்த இல்லத்திற்று அருகில் புதிய விவசாய சங்கம் துவக்கவிழா நடைபெற்றது.மருதூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள 50க்குமேற்பட்ட கிராம விவசாயிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த விவசாய சங்கம் துவக்கப்பட்டது.இதனுடன் யாருமற்ற ஆதரவற்றோர் இல்லமும் துவக்கவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் புதியதாக துவக்கப்பட்ட வள்ளலார் விவசாய சங்கத்திற்கு இதன் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகவேல்,செயலாளர் சுந்தரராஜன்,கவுரவத்தலைவர் தவமணி, ஓய்வுபெற்ற ஆசிரியர் தன்ராசு,கிராமநிர்வாக அலுவலர் வேணுகோபால், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் முன்னாள் எம்எல்ஏ மருதூர்ராமலிங்கம் பங்கேற்று வள்ளலார் விவசாய சங்கம், மற்றும் யாருமற்ற ஆதரவற்றோர் இல்லத்தையும் திறந்து வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் விவசாய சங்கத்தின் கோவிந்தராசு,இளங்கோவன்,சிவானந்தம்,சேகர்,சக்கரபாணி, கலைமணி,உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் சங்கத்தினைப்பற்றி விவசாய சங்கத்தினர் தெரிவிக்கும்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழிகாட்டியாகவும், விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலைகிடைக்கவும், அரசின் சலுகைகளை அனைவருக்கும் விரைவாக பெற்றுத்தரவும் இந்த சங்கம் தொடர்ந்துபாடுபடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Monday, May 25, 2020
சேத்தியாத்தோப்பு அருகே மருதூரில் புதிய விவசாய சங்கம் துவக்கம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...