உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, May 25, 2020

பாம்பு கடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொன்ன மருத்துவ பணியாளர்கள்





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி சுதா(30).இவர் நேற்று இரவு தனது வீட்டின் பின்பக்கத்தில் நின்றபோது எதிர்பாராமல் பாம்பு கடித்துள்ளது.அலறி துடித்த சுதாவை அவரவீட்டிலிருந்தவர்கள் சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது அரசு ஆரம்பசுகாதாரநிலையத்தில் இருந்தவர்கள் சிதம்பரம் அழைத்து செல்லுங்கள் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.அதற்கு சம்மதித் சுதாவின் உறவினர்கள் அவசர வாகனமான ஆம்புலன்ஸ்க்கு கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்களேன் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு பதிலளித்த அங்கிருந்தவர்கள் பாம்பு கடித்ததுக்கு எல்லாம் ஆம்புலன்ஸ்வராது என்று கறாராக சொல்ல செய்வதறியாது திகைத்த சுதாவின் உறவினர்கள் சுதாவை இருசக்கர வாகனத்திலேயே 20 கிலோமீட்டர் கடந்து கொண்டு சென்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதுகுறித்து சுதாவின் உறவினர்கள் தெரிவிக்கும்போது அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் இல்லை என்கிறார்களே,ஒரு உயிரைக்காப்பாற்றும் அக்கரை இல்லாமல் இருக்கும் இவர்களிடம் எப்படி கருணையையும், மனிதநேயத்தையும் எதிர்பார்க்கமுடியும் என வேதனையோடு தெரிவித்தனர்.