கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பதினைந்து வார்டுகள் உள்ளன.இங்கு சேத்தியாத்தோப்பு சென்னை சாலையில் வடக்குமெயின்ரோட்டிலிருந்து ராஜிவ்காந்தி சிலை வரை கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒன்று உள்ளது.இந்த வாய்க்கால் மூலம் வீடுகளிலிருந்து கழிவு நீர் காமராஜர் வாய்க்காலில் வடியும் வகையில் உள்ளது.இவ்வாறான நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் உள்ள கழிவுநீரானது பல இடங்களில் அடைத்துக்கொண்டு தேங்கியிருக்கிறது.இதனும் அதிகளவில் கொசுக்களும் உற்பத்தியாவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் பெரும் தொல்லைகளை அடைந்து வருகிறார்கள்.இரவினில் பேன் போட்டுக்கொண்டு தூங்கினாலும் கொசுக்கள் விடாமல் துரத்துகின்றன எனவும் கூறிவருகிறார்கள்.இதுபோல் காமராஜர்வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளும் கொசுத்தொல்லை மற்றும் வாய்க்காலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பெரும் வேதனையடைந்துள்ளனர்.இப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது பலமுறை பேரூராட்சியில் தெரிவித்துள்ளோம்.காமராஜர் வாய்க்கால் மற்றும் வடக்குமெயின்ரோட்டில் சாக்கடை கழிவு நீர் வாய்க்காலை தினமும் பராமரித்து வரவேண்டும்.வாய்க்காலில் எவ்விடத்திலும் சாக்கடை தேங்காமல் வடியவைக்கவேண்டும்.தூர்ந்துபோன இடங்களில் தினசரி அடைப்பை சரிசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.அது என்னாயிற்று என்று தெரியவில்லை.தற்போது கோடைக்காலத்தில் இவ்விடங்களில் அதிகளவில் கொசுத்தொல்லை உள்ளதால் பொதுமக்கள் பலரும் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.உடனடியாக விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மூலம் வழங்கப்பட்டு குடிநீர் காலையில் முதல் ஒரு மணிநேரத்திற்கு பல இடங்களிலும் குழம்பலாகவும் தெளிவில்லாமலும் வருகிறது.இதனை குடிப்பதற்கு பயன்படுத்தமுடியாது எனவும், முதல் ஒருமணிநேரத்திற்கு பிறகு வரும் குடிநீர் தெளிவாக உள்ளது.அதனை பிடிப்பதற்குள் தண்ணீர் வரும் நேரம் முடிந்துவிடுவதால் பலரும் சரியாக தெளிவான தண்ணீர் பிடிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.இதனையும் அதிகாரிகள் விரைவாக சரிசெய்திட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tuesday, May 26, 2020
சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் அவதி

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...