உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, May 26, 2020

பாசன வாய்க்கால் தூர் வாரும்பணியை சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் துவக்கி வைப்பு




கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது அருண்மொழித்தேவன் கிராமம்.இக்கிராமத்தில்
தமிழக அரசின் பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2020&21 கீழ்  தச்சக்காடு, அருண்மொழிதேவன், சேந்திரங்கிள்ளை, வேளங்கிப்பட்டு, குமட்டிக்கொல்லை, வள்ளலார் ஓடை மற்றும் கிளை பாசன வாய்கால்களை நீரினை பயன்படுத்துவோர் நலசங்கத்தின் மூலம் ரூ.18.80 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய கழக செயலாளர் அசோகன், அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், முன்னாள் நகர கழக செயலாளர் சுந்தர், ஆவின் முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ் பாபு, புவனகிரி உதவி பொறியாளர்  அருளரசன், தொழில்நுட்ப உதவியாளர் குமார், பணி ஆய்வாளர் ராஜேந்திரன், உதவிபணி ஆய்வாளர் பக்கிரி, விவசாயசங்கம் தலைவர் குமார், செயலாளர் கோதண்டம், பொருளாளர் மகாராஜன், கல்யாணம்,குப்புசாமி, வீரபாண்டியன்,பன்னீர்,முருகேசன்,மோகன், காளிமுத்து,புஷ்பராஜ்,ராமசாமி   மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இந்த பாசன வாய்க்கால் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர்க்கு மேல் தடையற்ற பாசனவசதி பெறும்.மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவைபோல் தொடர்ந்து விவசாயிகளை காத்து வரும் தமிழக முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் தங்களது நன்றியினையும் தெரிவித்தனர்.