கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பழையபாலம் நூறாண்டுகளுக்குமேலாக இருந்து வருகிறது.இப்பாலத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து நடைபெற்றது.அனைத்து வாகனங்களும் பழைய பாலத்தினை கடந்துசென்றன.இந்நிலையில் நாளடைவில் பாலத்தின் நலனை முன்னிட்டு பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டது.பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.இவ்வாறான சூழலில் கடந்த இருபதாண்டுகளாக பழைய பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது என்பது சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள பலருக்கும் தெரிந்திருக்கிறது.ஆனால் வெளியிலிருந்து சேத்தியாத்தோப்பு நகருக்கு வாகனங்களில் வரும் பலரும் இன்னமும் பழைய பாலம் உபயோகத்தில்தான் உள்ளது என நினைத்துக்கொண்டு தங்களது வாகனங்களை பழையபாலத்தின் முகப்புவரை கொண்டு செல்கிறார்கள்.இதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கும், இருசக்கர வாகனத்தில் பழையபாலத்தினை கடப்பவர்களுக்கும் பெரும் சிரமமாக உள்ளது.இது அடிக்கடி நடக்கிறது. மேலும் இதுபோன்ற வாகனங்களில் தினமும் ஐந்து அல்லது அதற்குமேலும் வருகின்றன.இதனை தவிர்க்கும் பொறுட்டு அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோடு பழையபாலம் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் எனவும், இவ்வாறு செய்வதால் வெளியூர் வாகனங்கள் தேவையில்லாமல் பழையபாலம் முகப்பு செல்லாமல் புதியபாலத்தின் வழியாக செல்வார்கள் எனவும், அதிகாரிகளுக்கு இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் அவர்கள் இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகளும் தெரிவித்து வருகிறார்கள்.
Wednesday, May 27, 2020
சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தில் அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...