தற்போதைய கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில்தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதற்கு பலரும் பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் குறிஞ்சிப்பாடி திமுக சட்டமன்ற
உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
வழங்கப்பட்ட நவீன கிருமிநாசினி தெளிக்கும் எந்திரம் வடலூர்
பேரூராட்சி வழங்கப்பட்டிருந்தது. அந்த எந்திரத்தினை சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு அதிகாரிகள் உத்தரவின்பேரில்
கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட கிருமிநாசினி எந்திரம் பழுதானதாக இருந்ததால் அதனை உடனடியாக பயன்படுத்த முடியாமல் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி
அதிகாரிகள் திணறி வருகிறார்கள். எந்திரத்தில் உள்ள பெல்ட் ரிப்பேர்
ஆனதால் அதனை மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.மேலும் இந்த எந்திரம் சில தினங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு அப்போதும் ரிப்பேராக இருந்ததால் திருப்பி அனுப்பபட்டது.இந்நிலையில் மீண்டும் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினி எந்திரம் பழுதானதாக இருந்தால் இதனை விரைவாக சரி செய்து சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுபோல் பேரூராட்சியின் சார்பில் அனைத்து வார்டுகளிலும் கைகழுவும் சோப், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட வசதிகளையும் செய்துதர அவர்கள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

