உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, May 30, 2020

ஐந்து லட்ச ரூபாய் மானியத்துடன் விவசாயிகளுக்கு அரசு வேளாண்மைத்துறை சார்பில் உழவு கருவி வழங்கல்





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் புவனகிரி வட்டாரவேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தின் மூலம் தமிழக அரசு மானியத்துடன் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவு கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் புவனகிரி வட்டாரவேளாண்மைத்துறை உதவி இயக்குநர் சுதாமதி தலைமை வகித்து கூட்டுப்பண்ணைத்திட்டத்தின்படி உழவர் உற்பத்தியாளர்குழு சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மூன்று பேருக்கு தமிழக அரசின் 5 லட்சம் ரூபாய் மானியத்துடன் வேளாண்மை உழவு கருவியான மூன்று  பவர்டில்லர்கள் வழங்கினார்.இதனை பெற்றுக்கொண்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும், புவனகிரி வட்டார வேளாண்மைத்துறைக்கும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் துணை வேளாண்மை அலுவலர் மணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிங்காரமூர்த்தி, சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள்  உடனிருந்தனர்.