உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, May 14, 2020

வீராணம் ஏரிக்கு உணவைத்தேடி வரும் வெளிமாநில பறவைகள் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.1200 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்துள்ளது.பொதுமக்கள்,விவசாயிகள்,மீனவர்கள் என பலருக்கும் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது வீராணம் ஏரி.இதிலிருந்து சென்னைக்கும் குடிநீர் செல்கிறது.இந்நிலையில் பல்வேறு சிறப்புகள் கொண்ட வீராணம்  ஏரிக்கு வெளிநாடுகள்,வெளிமாநிலங்கள் என பல பகுதிகளிலிருந்தும் விதவிதமான பறவைகள் உணவைத்தேடி வருகின்றன.தற்போது கோடைக்காலம் என்பதால் இனப்பெருக்கத்திற்காக கடலூர் மாவட்டம் பிச்சாவரம் செல்லும் இப்பறவைகள் உணவுக்காக அவை இருபது கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கும் வீராணம் ஏரிக்கு வருகை தருகின்றன.இங்கு மீன்கள்,நத்தைகள்,நண்டுகள்,புழுக்கள் என பறவைகளுக்கு பிடித்தமான உணவுகள் கிடைப்பதால் ஏரிக்கு பறவைகள் வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது.இவ்வாறு உணவுக்கு வருகை தரும் பறவைகளை ஏரியின் வழியாக செல்லும் பலரும் பார்த்து வியந்து செல்கிறார்கள்.மேலும் இது குறித்து கந்தகுமாரன் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி குமரகுரு கூறும்போது  தமிழக அரசு அறிவுறுத்தல்படி பறவைகளை வேட்டையாடாமல் பாதுகாக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையும் வைத்துள்ளதாக தெரிவித்தார்.