உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, May 11, 2020

கந்தக்குமாரன் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை,கையுறை வழங்கல்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கந்தக்குமாரன் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் உள்ள துப்பரவு தொழிலாளிகள் மற்றும் ஊராட்சியின் இதர பணியாளர்களுக்கு  நிவாரணம் வழங்கினர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவுறுத்தல்படியும்,
அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன்,அதிமுக கடலூர் கிழக்குமாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன்,ஆகியோர் வழிக்காட்டலிலும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் ஆலோசனையின் பேரிலும்
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கந்தக்குமாரன் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிரிமிநாசினி தெளித்தும், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.  துப்புரவு, தூய்மை காவலர் உள்ளிட்ட இதர பணியாளர்களுக்கு மளிகைப்பொருட்கள், அரிசி,காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்விகுமரகுரு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மிஸ்பாஹூனிசா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், சப்இன்ஸ் பெக்டர் ஜெய்சங்கர், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், இந்தியன் வங்கி மேலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். சேர்மன் கனிமொழிதேவதாஸ்படையாண்டனர், துணைச்சேர்மன் காஷ்மீர்ச்செல்விவினாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வழங்கினர். சக்கரை ஆலை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சுதாகர், வார்டு உறுப்பினர்கள் விமலா, விஜி, பாக்கியராஜ், ரேணுகா மற்றும் அப்துல்லத்தீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இதே போல் தூய்மை பணியாளர்,துப்புரவு காவலர்களுக்கு அவர்கள் பணி செய்யும்போது பயன்படுத்தும் கவச உடை, மற்றும் கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி குமரகுரு தலைமை வகித்தார். துணைத் தலைவர் மிஸ்பாஹூனிசா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் பங்கேற்று பயனாளிகளுக்கு கவச உடைகள், கையுறை மற்றும் முககவசங்களையும் வழங்கினார்.பின்னர் அவர் பணியாளர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.ஊராட்சி செயலர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.