கடலூர் மாவட்டத்தில் பல இங்களில் 144 தடை உத்தரவை மதிக்காதவர்களையும்,அவசியதேவைகளுக்கு செல்பவர்களையும் போலீசார் கொச்சையாக திட்டி லத்தியால் அடிப்பதாக பல இங்களிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.தமிழக அரசு எடுத்து வரும் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை நன்றாக புரிந்துகொண்டு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துருகிறார்கள்.அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள்.இந்நிலையில் அவசியத்தேவைகளுக்காகவும்,வெளியூர்களிலிருந்து வருபவர்களையும்,சம்பந்தப்பட்ட சோதனை சாவடி பகுதிக்குள் வசிப்பவர்கள் தங்கள் வயல்வெளி மற்றும் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்ய செல்பவர்களையும் மாவட்டத்தின் பல இடங்களில் போலீசார் கொச்சையாக திட்டி லத்தியால் அடித்து வருகிறார்கள்.அவ்வாறு அடிப்பதால் பலருக்கு எலும்புமுறிவும்,ரத்தக்காயங்களும் ஏற்படுகிறது என பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வெளியுலகுக்கு தெரிவித்து வருகிறார்கள். 144 தடை உத்தரவை அனைவரும் மதித்து நம் தமிழகத்திலிருந்து கொரனோ நோயை விரட்ட வேண்டும் என நம்தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசுடன் காவல்துறை, மருத்துவர்கள்,தூய்மைப்பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராடி வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கும் வேதனையையும்,மன உளைச்சலையும் தந்து வருகிறது.தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில் காவலர்கள் பொதுமக்களை லத்தியால் அடிக்க கூடாது, கண்ணியமாக அறிவுறுத்தல் வழங்கவேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் போலீசாருக்கு வழிக்காட்டலை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்கள்.இதனை போலீசார் மறந்து விட்டார்களா? எனவும், மாவட்ட கண்காணிப்பாளர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Friday, April 10, 2020
போலீசார் பொதுமக்களை அடிப்பதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்...