கடலூர் மாவட்டம் புவனகிரியியை சேர்ந்த தனியார் பள்ளியில் மூன்றாம்
வகுப்பு படிக்கும் ராதாகிருஷ்ணனின் மகள் சாய்சம்ருதா. இவர் தமிழக
முதல்வரின் கொரானோ சிறப்பு நிதிக்காக தன்னுடைய உண்டியல் பணம் ரூபாய் 1277
ஐ புவனகிரி வட்டாட்சியர் சுமதியிடம் வழங்கியுள்ளார்.இதற்கு
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த புவனகிரி வட்டாட்சியர்
சுமதி சாய்சம்ருதாவிடம் கொரானோ தொடர்பான வினாக்களையும் கேட்டார்.அதற்கு
சிறப்பான பதிலளித்த சாய்சம்ருதா அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று
வருகிறார்.இதனுடன் அனைவரும் தமிழக முதல்வரின் சிறப்பு நிதிக்கு தாராளமாக
நிதித்தாருங்கள், கொரானோ நோய் தாக்காமல் இருக்க அனைவரும் பத்திரமாக
வீட்டிலேயே இருங்கள் என்று பொதுமக்களுக்கு அவர் கோரிக்கையும்
வைத்துள்ளார்.


