சேத்தியாத்தோப்பில் புவனகிரி வட்டாட்சியர் வியாபாரிகளுடன் ஆலோசனை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ஆர்ஐ அலுவலகத்தில் புவனகிரி வட்டாட்சியர் சுமதி தலைமையில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகம், சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள்,காய்கறிகடைக்காரர்கள்,சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.தொடர்ந்து பேசிய புவனகிரி வட்டாட்சியர் சுமதி கூறும்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள நடவடிக்கையின்படி கொரானோ நோய்த்தொற்றை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.இதனையடுத்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறிகள்,மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும்போது அரசு வழிவகுத்துள்ள சமூக இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கவேண்டும்.அதற்கு வியாபாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தவேண்டும்.அனைவரும் முககவசம் அணிந்திருக்கவேண்டும்.அரசு புதியதாக வெளியிட்டுள்ள நேரத்தின்படி மளிகை கடைகள்,காய்கறிகடைகள் உள்ளிட்டவை திறந்திருக்கவேண்டும்.காய்கறி கடைகளில் அதிக கூட்டம் ஏற்படாமல் இருக்க காய்கறிகடைகளை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்.மளிகை கடைக்காரர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் பொருட்களின் தேவை பற்றிய விவரத்தை எழுதி எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கவேண்டும்.கூடுமானவரை மளிகைகடைக்காரர்கள் பொதுமக்களுக்கு டோர் டெலிவரியில் பொருட்களை தருவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என பல்வேறு விஷயங்களை புவனகிரி வட்டாட்சியர் சுமதி அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜன்,சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர்,வருவாய் ஆய்வாளர் சுபாஷ்,எஸ்ஐ மாணிக்கராஜா,விஏஓ சுரேந்தர்,கிராம நிர்வாக உதவியாளர் அன்புதாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sunday, March 29, 2020
சேத்தியாத்தோப்பில் புவனகிரி வட்டாட்சியர் வியபாரிகளுடன் ஆலோசனை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்...