உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, March 27, 2020

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் கொரானோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்




சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் கொரானோ நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்.தமிழகத்தில் கொரானோ நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.அதனடிப்படையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் உள்ள பதினைந்து வார்டுகளிலும் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுபிரசுரங்களை வழங்கினர்.அதுபோல் நோய்த்தொற்றுகளை தடுக்கும் விதமாக சேத்தியாத்தோப்பு கடைத்தெரு,பேருந்து நிலையம்,ராஜிவ்காந்தி சிலைப்பகுதி என அனைத்து இடங்களுக்கும் கிரிமி நாசினி பிளிச்சிங் பவுடர் போடப்பட்டது.தொடர்ந்து கிரிமி நாசினி திரவ மருந்து இப்பகுதிகளில் தெளிக்கும் பணியை பேரூராட்சியின் அனைத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலைப்பகுதியில் நடைபெற்ற கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்து சர்க்கரை ஆலையின் நிர்வாக அலுவலகம்,ஊழியர்கள் குடியிருப்பு பகுதி,பணியாளர்கள் நடமாடும் பகுதி, சர்க்கரை ஆலை ஆணையரின் குடியிருப்பு பகுதி என பல பகுதிகளிலும்  கிரிமி நாசினி மருந்து தெளிக்க உத்தரவிட்டு அதனை வழிநடத்தினார்.தமிழக அரசின் உத்தரவின்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படியாகவும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் எல்லைப்பகுதியில் எவ்விதமான நோய்த்தொற்றுகளும் ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுத்து பணியாளர்கள் மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு பிளிச்சிங் பவுடர்,கிரிமிநாசி மருந்துகள் தெளித்து வருகிறோம்.மேலும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் அலுவலகத்திற்கு யார் வருகை தந்தாலும் அவர்களை தூய்மையாக கைகளை கிரிமி நாசினி கொண்டு கைகழுவி விட்டு வரச்சொல்கிறோம். பலருக்கும் பாதுகாப்பு முக  கவசமும் வழங்கி  வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.சர்க்கரை ஆலையில் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை மருந்துகள் தெளிக்கும்பணியை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் உதவியாளர் செல்வராஜ்,பணியாளர்கள் சேகர்,ராம்குமார்,ஜோதி,தூய்மைப்பணியாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.