உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, February 9, 2020

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாலாஜா ஏரியை தூர்வார 50 கிராமமக்கள் கோரிக்கை




சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாலாஜா ஏரியை தூர்வார 50 கிராமமக்கள் கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர்,கரைமேடு கிராமப்பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாலாஜா ஏரி.மிக பழமையான ஏரியும், 1200 ஏக்கர் பரப்பளவும் கொண்டது.ஏரியின் நீர்பிடிப்புத்திறன் பனிரெண்டு அடிக்குமேல் உள்ளது.இந்த ஏரிக்கு சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று நீர், மற்றும் நெய்வேலி என்எல்சி உபரிநீரும் வருகிறது.அதனால் இந்த ஏரியானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிரம்பிய ஏரியாக காட்சியளிக்கும்.வாலாஜா ஏரியை நம்பி கரைமேடு,பின்னலூர்,அம்பாள்புரம்,உளுத்தூர், தலைக்குளம்,மருதூர்,கொளக்குடி,கிருஷ்ணாபுரம் என ஐம்பதுக்குமேற்பட்ட கிராமங்களின் 15ஆயிரம் ஏக்கர்க்குமேல்  விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இதனால் மேற்கானும் பகுதிகளில்  வருடத்தின் மூன்று போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை செழிக்க வைக்கும் வகையிலும் வாலாஜா ஏரி முக்கிய பங்காற்றி வருகிறது.நிலத்தடி நீர் மட்டத்தினை சமன்செய்வதோடு கால்நடைகள்,பறவைகள் உள்ளிட்டவற்றிற்கு உயிர்வாழ்தலையும் அளித்து வரும் மிக சிறப்பு வாய்ந்தது வாலாஜா ஏரி.இவ்வாறு பல சிறப்புக்களை கொண்ட இந்த ஏரியானது தற்போது மோசமான நிலையில் இருப்பதால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்,விவசாயிகள் என பலரும் வேதனையடைந்துள்ளனர்.பல ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி நிறுவனம் ஒரு முறை தூர்வாரியதோடு சரி.அதற்கு பிறகு ஏரி தூர்வாராமல் விடப்பட்டதால் ஏரியானது அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.அவர்கள் தெரிவிக்கும்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களது  அலட்சியத்தினாலும்,கவனக்குறைவினாலும் வாலாஜா ஏரியினை பாதுகாக்க தவறி வருகிறார்கள்.இதனால் ஏரியில் நீர்ப்பிடிப்பு        த்திறன் குறைந்து முட்செடிகள்,மண்மேடுகள்,கோரைகள் போன்ற பலவை முளைத்திருக்கிறது.இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்தும் சரிவர வரமுடியாத நிலை.அவ்வாறு தண்ணீரும் வராத நிலையில் ஏரியின் ஆழம் 12 அடியில் இருந்தது தற்போது சில இடங்களில் இரண்டு அடி அளவே இருக்கிறது.இதற்கு காரணம் ஏரியில் அதிகளவில் மண் தூர்ந்து மேடாகி காணப்படுகிறது.    இதனால் தொடர்ந்து ஏரிக்குள் தண்ணீர் நிற்காமல் வடிந்து போகிறது.இவ்வாறு பலமாதங்களாக தொடருவதால் ஏரியின் இருக்கும் சொச்ச அடையாளமும் காணாமல்போய்விட்டது.தற்போதைய நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டு வாலாஜா ஏரியினை தூர்வாரி அதிலுள்ள முட்செடிகள்,கோரைகளை அகற்றிடவேண்டும்.இதனால் ஏரிக்குள் பழையபடியே 12 அடிக்கு தண்ணீர்தேக்கி வருடத்தின் எல்லா றநாட்களும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்திடமுடியும். இதனை நம்பியிருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள்     முழுமையான பயனை அடைவார்கள்.மேலும் வாலாஜா     ஏரியின்  கரைமேல் அமைக்கப்பட்டுள்ள மோசமான சாலையை தரமானதாக அமைத்துதரவேண்டும்.ஏரியின் பல இடங்களில் காலியாக இருப்பதை பலவகை மரங்களை வளர்த்து ஏரியினை அழகிய சுற்றுலாத்தளமாகவும் மாற்றிடவும் வேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

2