சேத்தியாத்தோப்பு அருகே மிளகுதோட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தைசேர்ந்தவர் விவசாயி பூமாலை.இவர் பல்வேறு இயற்கை முறையிலான பயிர்சாகுபடி கருத்தரங்குகள், வேளண்மைத்துறை அதிகாரிகள வழிகாட்டல் என பலவற்றின் மூலம் அனுபவம் பெற்று தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் மிளகு சாகுபடியை அற்புதமாக செய்துள்ளார்.இயற்கை மலைப்பிரதேசம் மற்றும் சரியான பருவநிலைகளில் மட்டும் மிளகு விளையக்கூடிய பணப்பயிர்ஆகும்.இப்படிப்பட்ட மிளகு சாகுபடியை கடலூர் மாவட்டத்தில் முதன்முதலாக இரண்டு ஏக்கரில்துணிச்சலாக சாகுபடி செய்துள்ளார்.அதிலும் கடந்தாண்டு முதல் அறுவடையை முடித்தும் விட்டார்.இவரின் மிளகு மற்ற இடங்களில் கிடைப்பதைவிட தரமானதாகவும், அதிக காரம் நிறைந்தாகவும் இருக்கிறது.அதனால் ஒரு கிலோ மிளகு எண்ணூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை விலைபோகிறது என்று மகிழ்ச்சியாகவும் விவசாயி பூமாலை தெரிவிக்கிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது இந்த முறையில் மிளகு சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு முதலில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை அவசியம் தேவை.மற்ற பயிர்வகைகளைப்போல் அல்லாமல் மிளகு சாகுபடி என்பது நீண்டகாலப்பயிராகும்.முறைப்படி இதனை தெரிந்துக்கொண்டால் எலலோரும் இதனை எளிதாக செய்யலாம்.அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் வழங்குகின்ற ஆலோசனை,மண்ணைப்போல் பொறுமை மற்றும் நமது செயல்பாடு இருந்தால்போதும் இதனை .பயிர்செய்து அனைவரும் கோடிஸ்வரரர் ஆகலாம் என்கிறார் விவசாயி பூமாலை.இவரது மிளகு தோட்டத்தை கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் மத்தியத்திட்டம் வேல்விழி, கீரப்பாளையம் வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்தனர்.அபபோது மிளகு விவசாயிம் அவரின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.இவர் தண்ணிரைசிக்கனமாக பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் மிளகு சாகுபடி செய்துள்ளதைக்கண்டு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.மிளகுசாகுபடி செய்துள்ள தோட்டத்தில் தேக்கு மரங்களும் வானுயர வளர்ந்துள்ளதால்அதன் மூலமும்பல லட்சம்வருமானம் பெறமுடியும்என்று விவசாயி பூமாலை தெரிவித்தார்.மேலும் அவர் நிறைவாக அனைத்து விவசாயிகளுக்கும் கூறியது மிளகு சாகுபடியை முதலில் கஷ்டப்பட்டு தொடங்கிவிட்டால் போதும்.மூன்றாண்டுகளுக்கு பிறகு படிப்படியாக ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டுக்கு பத்துலட்சம் வரை மிளகுலாபத்தை அள்ளித்தரும்.இது சரியாக பராமரிக்கப்பட்டால் ஒரு மிளகுதோட்டம் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்குமேலும் நல்ல லாபத்தை இதே அளவில் தந்துகொண்டிருக்கும என்று அவர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் வைத்தார்.
Tuesday, February 4, 2020
சேத்தியாத்தோப்பு அருகே மிளகுதோட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...