சேத்தியாத்தோப்பு அருகே பயனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது வெள்ளியக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இந்த சங்கத்தின் மூலம் இப்பகுதியிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டமான பொங்கல் பரிசு பொருளான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்புத் துண்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை அடங்கிய தொகுப்புகள் இப்பகுதியிலுள்ள சாத்தமங்கலம், சக்திவிளாகம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை சங்கத்தின் தலைவர் கார்த்திக் பயனாளிகளுக்கு வழங்கினார். பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.