உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, January 10, 2020

சேத்தியாதோப்பு அருகே பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு





 
சேத்தியாதோப்பு அருகே பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு. தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசின் அறிவிப்பின்படி சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் மற்றும் மற்றொரு அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், மேலும் அனைத்து மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வாழைக்கொல்லை அரசு நடுநிலைப்பள்ளியில் வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள வாழை கொல்லை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு வாழை கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், துணைத் தலைமையாசிரியர் கருணாகரன், வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி குரளரசன், உள்ளிட்ட  ஆசிரியர்கள், ஆசிரியைகள் பி ஆர் டி மதினா,அன்பகம், வள்ளி, கீதா, கிருத்திகா, ஆசிரியர்கள் இளஞ்செழியன், செல்வி மற்றும் பள்ளி மாணவர்கள் என சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, சந்தனம், ரோஜாப்பூ,  கொடுத்து வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் குமார் வருகை தந்த.இதனையடுத்து மாணவர்களுக்கு தங்களைப் பற்றிய அறிமுகம் முடித்து யோகா வகுப்பு, சிறப்புப் பாடங்கள் உள்ளிட்ட பல வகுப்புகள் சிறப்பு  பயிற்சியாக எடுக்கப்பட்டன.
 
 
 
 
 
மேலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய விருந்தும் முடித்து அவர்களை சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ள எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றுலாவும் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளி பரிமாற்றத் திட்டத்திற்கு  வருகை தந்த வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தெரிவிக்கும்போது தங்களுக்கு இந்த திட்டத்தின்படி வருகை தந்தது மிகுந்த பயன் அளித்தது. புது அனுபவமாகவும் இருந்தது. எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது .நாங்கள் எங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். அவர்களும் தங்களது கருத்துக்களை எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள் இந்த பள்ளி பரிமாற்ற திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும் திட்டமாகும் சிறப்பாக அமைந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். பின்பு பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் நினைவாக வெய்யலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், வாழைகொல்லை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.