சேத்தியாத்தோப்பு அருகே மஞ்சள் சாகுபடியில்
மகத்தான லாபம் பார்க்கும் விவசாயிகள்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பெரியகுப்பம் கிராமம்.இக்கிராமத்தில் விவசாயிகள் பலர் மஞ்சல் சாகுபடியில் கடந்த ஐம்பது வருடங்களாக அதிக வருமானம் பார்த்து வருகிறார்கள்.மருத்துவ குணம் நிறைந்ததும், தமிழர்களின் பாரம்பர்யமாக விளங்கிவருகிறது மஞ்சள். இது உணவில் முக்கிய பங்கு வகித்தும் வருகிறது. மஞ்சளை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.இவ்வாறு சிறப்பு மிக்க மஞ்சளை சாகுபடி செய்து அதிக லாபம் பார்க்கமுடியும் என அதனை பயிரிடும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.தற்போது பொங்கல் பண்டிகை இன்னும் சிலநாட்களில் வருவதால் அதற்கு தேவைப்படும் மஞ்சள் கொத்துக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம்,சின்னகுப்பம்,வீரமுடையாநத்தம்,ஆதனூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் மஞ்சளை ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு சாகுபடி செய்துள்ள மஞ்சளை வெளியூர் வியாபாரிகள் முன்பணம் தந்து வாங்கியுள்ளனர். மஞ்சளை சாகுபடி செய்தாலே இருமடங்கு லாபத்தை அள்ளித்தருகிறது. அது மட்டும் அல்லாமல் மஞ்சளை பதப்படுத்தி விற்பனை செய்யும்போது நல்ல விலையில் விற்பனையும் ஆகிறது. மஞ்சள் சாகுபடி செய்தால் விரைவிலேயே அவர் பணக்காரராக ஆகலாம் என்று இதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.