கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வசித்து வருபவர் மணிமாறன்.இவரை மணிமாறன் என்று கூறுவதைவிட அரிமாசங்க மணிமாறன் என்று கூறினால் பொறுத்தமாக இருக்கும்.அனைத்தையும் கடந்து தன்னால் முடிந்த நல்ல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.சேத்தியாத்தோப்பு நகரில் மட்டும் அல்லாது சேத்தியாத்தோப்பு சுற்றியுள்ள பல பகுதிகளுக்கும் சென்று அரிமாசங்கத்தின் உதவியோடும், பல நண்பர்கள் இணைந்தும், தனிப்பட்ட முறையில், என பலவாறு உதவிகளை செய்து வருகிறார்.இவரால் அரசுப்பள்ளிகள் பலவற்றிற்கும் அதிகமான உதவிகள் இப்போதும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.மணிமாறன் என்றாலே போதும் நட்பானவர், அன்பானவர், அனைவரிடத்திலும் இனிமையாக பழக கூடியவர், பல தரப்பிலும் நண்பர்களை கொண்டிருக்கும் மகத்தான மனிதர் என நகரில் யாரைக்கேட்டாலும் எளிதாக சொல்வார்கள்.இவர் கடந்து வந்த பாதை என்பது சாதாரணமானது.வாழைக்கொல்லை கிராமத்திலிருந்து சேத்தியாத்தோப்பு நகருக்கு அவர் வருகை தந்த நாட்கள் கடின உழைப்பும், வாழ்க்கையில் அவருக்கு இருந்த உயர்ந்த லட்சியங்களும்தான்.சாதாரண மனிதர் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்தையும் எட்டலாம் என்று பலரும் நம்பிக்கை தந்துக்கொண்டுள்ளவர்
.இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போக நிறைய ,இருக்கிறது.இவ்வாறு சிறப்பு மிக்க பல உதவிகளை செய்து வந்த மணிமாறன் அவர்களுக்கு பலருடைய பாராட்டாலும், ஆசீர்வாதத்தினாலும் இன்று டாக்டர் பட்டம் பெறும் வரை உயர்த்தியிருக்கிறது என்றால் அது கடவுளின் கருணை என்றுதான் சொல்லவேண்டும்.ஆம் திரு.மணிமாறன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது என்பது சரியான மனிதர்க்கு சரியான நேரத்தில் கிடைத்த உயரிய அங்கீகாரம் என்றுதான் கூறவேண்டும்.டாக்டர் பட்டம் கிடைத்த மணிமாறன் அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்தவண்ணம் உள்ளது.அவரது தன்னலமில்லா சேவை எப்போதும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.