உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, January 27, 2020

சிறப்பு ஊராட்சியாக மாற்றிட கிராமமக்கள் ஒருமனதாக தீர்மானம்




சிறப்பு ஊராட்சியாக மாற்றிட கிராமமக்கள் ஒருமனதாக தீர்மானம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது ஆனைவாரி ஊராட்சி.இந்த ஊராட்சியில் இந்தியாவின் 71வது குடியரசுதினத்தை முன்னிட்டு சிறப்பு கிராசபைக்கூட்டம் ஆனைவாரி ஊராட்சியின் ஊராட்சி மன்ற அ-லுவலகத்தில் நடைபெற்றது.நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் இந்த ஊராட்சி தலைவர் பதவியானது தேர்லுக்கு முன்பே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.அதனால் இந்த ஊராட்சியை சிறப்பான ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் ஆனைவாரி ஊராட்சிமன்றத்தலைவர் கலையரசி அண்ணாதுரை கிராமபொதுமக்களின் அனைவரின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும்விதமாக இந்த சிறப்புக்கிராம சபைக்கூட்டத்தை துவக்கினார்.    ஆனைவாரி கிராமத்தில் உள்ள சாலை,குடிநீர் வசதி,தெருமின்விளக்கு அதிகரித்தல், கிராமத்திற்கு மழைநீர் வடிகால் வசதி,கிராமக்குளம் மழைநீர் சேமிப்புக்கு மாற்றும் விதமாக தூர்வாருதல் விருத்தாசலம்பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுதல்    ,கிராமத்தின் தூய்மையை பாதுகாப்பாக வைபபதற்கும்,அதனை பராமரித்து வருவதற்கும் அனைவருக்கும் தனி கழிவறை வசதி,கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க மழைநீர் சேமிப்பு வசதி, கிராமத்தின் பசுமையை நிலைநிறுத்த மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் விரைவில் தமிழகத்தின் சிறந்த முதன்மையான ஊராட்சியாக ஆனைவாரி ஊராட்சியை மாற்றிட தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலைச்செல்வி அண்ணாதுரை கிராமக்களுக்கு தெரிவித்தார்.இந்த சிறப்பு கிராம சபைக்-கூட்டத்தில் துணைத்தலைவர்,அனைத்து வார்டு உறுப்பினர்கள்,கிராமபொதுமக்கள், வட்டார மேற்பார்வை அதிகாரிகள் என பலரும்  பங்கேற்றனர்.முடிவில் ஆனைவாரி கிராமத்தின் வளர்ச்சிக்கு  எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு ஒருமனதாகதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.    முடிவில் சிறப்பு கிராமசபைக்கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் ஊராட்சி மன்றத்தலைவர் கலைச்செல்வி அண்ணாதுரை நன்றியை தெரிவித்தார்.