சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் கிரமசபைக்கூட்டத்திற்கு வருகை தந்த வட்டார வளர்ச்சி அதிகாரி வெளியேறியதால் பரபரப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் ஊராட்சி.இந்த ஊராட்சியில் இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கிராமசபைக்கூட்டத்தில் கிராமமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.முதலில் நாட்டின் 71வது குடியரசு தினத்திற்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டு தேசியக்கொடியை ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.பின்னர் துவங்கிய சிறப்பு கிராமசபக்கூட்டத்தில் சென்ற காலத்தில் 2018&2019 ஆண்டின் கிராமபஞ்சாயத்தின் வரவுசெலவினங்களை ஊர்பொதுவில் வாசிக்கும்படி கிராமமக்கள் ஊராட்சி செயலரிடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் காலதாமதம் ஆனதே தவிர வரவு செலவினங்கள் வாசிக்கப்படவில்லை.இதனால் மழவராயநல்லூர் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து பிருந்தாவதி வரதராஜன் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் முறையிடுவதற்காக நீண்டநேரமாக தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை.இதனையடுத்து அவர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் தெரிவித்தபிறகு சற்று நேரத்திற்கு பிறகு தானாக மழவராயநல்லூர் கிராமத்திற்கு கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலகிருஷ்ணன் வருகை தந்தார்.அவர் வந்த பின்பு கிராமமக்கள் சராமாரியாக அவரிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும் அதற்கு பதிலளிக்க தடுமாறினார்.கிராமமக்கள் தங்களது கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படவேண்டிய அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.அதனால் கடந்த 2018&2019 ஆண்டின் மழவராயநல்லூர் கிராமத்தின் வரவு செவினத்தை வாசிக்கசொல்வதாக வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டனர்.இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அதிகாரி கிராமமக்களுக்கு உரிய பதிலளிக்காமல் கிராமத்திற்கு தேவையான அனைத்து தேவைகளும் முறைப்படி நிறைவேற்றித்தரப்படும் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு கிராமமக்களின் கேள்விக்கு தாக்குபிடிக்கமுடியாமல் வேக வேகமாக கிராம சபைக்கூட்டத்தினை விட்டு வெளியேறினார்.இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.இதனையடுத்து தொடந்த கிராமசபைக்கூட்டத்தில் கிராமத்தின் சுற்றுப்புற தூய்மையை காப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.அதனால் கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பது தடைசெய்யப்டுவதாகவும், அதன்படி கிராமத்தில் அனைவருக்கும் தனித்தனி கழிவறை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும், கிராமத்தின் குடிநீர் வசதி,மருத்துவம்,சாலை வசதி,தெருவிளக்கு,குடிநீர்த்தொட்டி சுத்தம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பணிகளை செய்து வரும் பணியாளர்கள் சரியாக அவரவர் பணிகளை சரியாக செய்து கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவிடவேண்டும்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்து சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கிராமசபைக்கூட்டத்தில் துணைத்தலைவர்,அனைத்து வார்டு உறுப்பினர்கள்,ஒன்றிய சிறப்பு அதிகாரி, மருத்துவ துறையினர்,கிராம பொதுமக்கள என ஏராளமானவர்கள் இந்த கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.இந்நிலையில் மழவராயநல்லூர் கிராம ஊராட்சியில் கிராசபைக்கூட்டத்திற்கு வருகை தந்த வட்டார வளர்ச்சி அதிகாரி பாதியிலேயே வெளியேறிதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் சென்ற காலத்தில் நடைபெற்றுள்ள ஊராட்சியின் நிதி முறைகேடு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் மனுஅளிக்கவிருப்பதாகவும் மழவராயநல்லூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.
Monday, January 27, 2020
சேத்தியாத்தே-£ப்பு அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் கிராமசபைக்கூட்டத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி வெளியேறியதால் பரபரப்பு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...