உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, December 23, 2019

புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக வேட்பாளர்களுக்கு விறுவிறு வாக்கு சேகரிப்பு





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள
கொளக்குடி கிராம பகுதிக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வருகைதந்தார். அவர் புவனகிரி ஒன்றியத்தில் ஒன்றிய வார்டு உறுப்பினர்பதவிக்குப் போட்டியிடும் 9 அதிமுக வேட்பாளர்களையும் மற்றும் பாமக,தேமுதிக உள்ளிட்ட மற்ற ஆறு வேட்பாளரை ஆதரித்து உள்ளாட்சித் தேர்தல்பிரச்சாரம் செய்தார். கொளக்குடி பகுதிக்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சருக்கு கடலூர் மேற்குமாவட்ட அதிமுக கழக செயலாளர் அருண்மொழித்தேவன் மற்றும் புவனகிரி ஒன்றிய அதிமுக  கழக செயலாளர் சிவப்பிரகாசம்,கீரப்பாளையம் ஒன்றிய அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் தலைமையிலும்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பெருந்திரளான
அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்தோடு சட்டத்துறை அமைச்சர் வரவேற்றனர். தொடர்ந்துந்து அமைச்சர் புவனகிரி,கீரப்பாளையம் ஒன்றியங்களில்  பிரச்சாரம் மேற்கொண்டு மாண்புமிகு சட்டத்துறை
அமைச்சர் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் கடந்த 3 ஆண்டுகளாக திமுக சதிசெய்து கோர்ட்டில் வழக்கு போட்டு முடக்கி வைத்து விட்டது. தற்போது அம்மாவின் ஆசியால் நடைபெற்றுவரும் நல்லாட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வரின்
சிறப்பான அமைதி வழியிலான சட்ட போராட்டத்தால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் மீண்டும் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடைகள் போட்டுக்கொண்டே வருகிறார்.அம்மாவின்
சிறப்பான நல்லாட்சியில் எதிரிகள் யார் எத்தனை தடைகள் போட்டாலும் அதை எல்லாம் மீறி மாண்புமிகு தமிழக முதல்வர் சிறப்பான முறையில் நல்லாட்சி தந்து மக்கள் நலத்திட்டங்களையும் ஏழைகளுக்கான பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட பலவற்றையும் வழங்கிவருகிறார்.தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி
தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். இந்த நமது வெற்றியானது நமது எதிரிக
ளுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.யார்வந்து தடுத்தாலும் அம்மாவின் அரசு ஏழைஎளிய மக்களுக்கு செய்து வருகின்ற மக்கள்நலத்திட்டங்களை தடுக்கவே முடியாது.



இது உறுதி என்றும் அவர்பேசினார்.இப்பிரச்சாரத்தில் அதிமுக ஊராட்சிகழக செயலர் ஜெயசீலன்,சேத்தியாத்தோப்பு சர்க்கரைஆலைத்துணைத்தலைவர் விநாயகமூர்த்தி,சாக்காங்குடி கருப்பன்,புவனகிரி நகரகழக செயலாளர் செல்வகுமார்,சேத்தியாத்தோப்பு நகரகழக செயலாளர் எஸ்.ஆர்.மணிக்கண்டன்,உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,நகர கழக,கிளைக்கழக நிர்வாகிகள் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.இதைப்போல் பாமக சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் அஷோக்குமார்,தேவதாஸ் படையாண்டவர்,வன்னியர்சங்க மாநில துணை தலைவர் வத்தராயன்தெத்து செல்வராஜ், என ஏராளமான பாமக,தேமுதிக,தமாக உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினரும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சருடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.இவர்களுடன் அதிமுக வேட்பாளர்களும்,கூட்டணிக்கட்சி வேட்பாளர்களும் உடனிருந்தனர்.