உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, December 11, 2019

கீரப்பாளையம்&சேத்தியாத்தோப்பு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி




கீரப்பாளையம் &சேத்தியாத்தோப்பு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வடஹரிராஜபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகிலும், கீரப்பாளையம்&சேத்தியாத்தோப்பு சாலையிலும் புதிய தரைப்பாலம் கட்டும்பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமானது.அப்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல்  சாலையின் ஒரு பகுதியில் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டுநடைபெற்றது.அதில் ஒருபக்க பாலத்தின் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன.பிறகு மற்றொரு பகுதியில் பாலம் அமைக்கும் பணி தொடங்காமல் அப்படியே கிடப்பில்போடப்பட்டது.இது கடந்த சிலமாதங்களாக தொடர்ந்த நிலையில் அப்பகுதி சாலையில் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தையும், விபத்து ஆபத்தையும் ஏற்படுத்தி வந்தது.இதனையடுத்து இந்த பாலத்தின் மற்றபகுதி பணிகளை விரைந்து முடிக்குமாறு இப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் சிதம்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். உடனடியாக அனைவரின் கோரிக்கையை ஏற்ற சிதம்பரம் நெடுஞ்சாலைக்கோட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு அதுப்பற்றிய அரிக்கை மேலதிகாரிகளுக்கு அனுப்பினர்.இதன்பின்பு கடந்த சிலநாட்களுக்கு முன் விரைவாக பாலத்தின் மற்றொரு பகுதியின் பணிகளை அதிகாரிகள் துவக்கினர்.அப்பணியானது உடனடியாக முடிக்கப்பட்டு தற்போது வடஹரிராஜபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகிலுள்ள கீரப்பாளையம்&சேத்தியாத்தோப்பு சாலைப்பாலம் போக்குவரத்துக்கு பயன்பட்டு வருவதால் வானக ஓட்டிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருந்துக்கொண்டே இருக்கும்.அதனால் அனைவரின்கோரிக்கையை ஏற்று  விரைவாக அமைத்துள்ளதாக சிதம்பரம் நெடுஞ்சாலைக்கோட்ட உதவி பொறியாளர் கார்த்தி,மற்றும் சாலை ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் தெரிவித்தனர்.