உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, December 11, 2019

மக்களைப்பற்றிய அக்கரை அரசுகளுக்கு இல்லை வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பேச்சு





மக்களைப்பற்றிய அக்கரை அரசுகளுக்கு இல்லை
வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பேச்சு
.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் மணிமாறனின் புதிய காலனி மற்றும் பரிசுப்பொருட்கள் கடை திறப்பு விழா நடைபெற்றது.இதற்கு வருகை தந்த வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் பேசும்போது தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெங்காய விலையேற்றத்திற்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம்.வெங்காயம் என்பது ஏன் விலையேறியது?அதை பயிர்செய்யும் விவசாயிக்கு சரியான ஊக்கப்படுத்தல் இல்லை, உள்நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரித்து அதிலும் தமிழகத்தில் வெங்காய உற்பத்தியை அதிகரிக்க அதுப்பற்றிய அக்கரையையும்,ஆலோசனையையும் அரசுகள் செய்யவில்லை.ஆனால் வெங்காய விலையேற்றத்தை சமாளிக்கிறோம் என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து பெரிய பன்னாட்டு முதலாளிகளுக்கு வழிவகுக்கிறார்கள்.இங்குள்ள பணமெல்லாம் வெளிநாட்டிலிருக்கும் யாரோ ஒரு பெரிய முதலாளிக்கு செல்கிறது.அதை முதலில் தடுக்கவேண்டும்.தற்போதைய நிலையில் மத்திய மாநில அரசுகள் உள்நாட்டில் காய்கறி உற்பத்தியை ஊக்கப்படுத்தியும், வெங்காயம் போல் அடிக்கடி விலையேற்றம் கானும் பொருளுக்கு தனி கவணம் செலுத்தி அதனை உள்நாட்டு விவசாயியே அதிகளவில் உற்பத்தி செய்து நாம் தன்னிறைவு அடைவதற்கு வழிசெய்யவேண்டும்.இதனால் வெங்காயம் உள்ளிட்ட எந்த காய்கறியும் குறிப்பிட்ட விலைக்குள் இ-ருக்கும்.சாதாரண மக்களாளும்  வாங்கமுடிகிற விலையிலும் இருக்கும்.இதனை அரசுகள் கவனிக்காமல் தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கின்றன.மக்களை காக்கவேண்டும் என்ற அக்கரையே அரசுகளுக்கு இல்லை.மேலும் உள்ளாட்சித்தேர்தலை நடத்த தடையில்லை என்ற நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம்.ஆனால் யார் உள்ளாட்சி பொறுப்புகளில் அமர்ந்தாலும் அதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? வழக்கம்போல அரசியல் கட்சிகள் நடப்பார்கள்.பொதுமக்களும் தங்களுக்கான உரிமைகளைக்கேட்டு தெருவுக்கு தெரு போராடுவார்கள் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.இன்று நாங்கள் மீண்டும் ஒருபோராட்டத்தை கையிலெடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்.ஆம் உள்நாட்டு வணிகர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்தி நிறுத்தி உள்நாட்டு வணிகர்களின் நலன்காக்க அரசுகள் முன்வரவேண்டும்.அப்படி முன்வராமல்போனால் நாங்கள் அனைத்து வணிகர்களும் ஒன்றிணைந்து உள்நாட்டு வணிகர்களின் நலன்காக் சுதேசி முழக்கத்தை கையிலெடுத்து போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர் தெரிவித்ததார்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு வணிகர் சங்க தலைவர் மகாராஜன்,துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி,செயலாளர் ஆனந்தன்,பொருளாளர் கிஷோர்குமார்,இயற்கை விவசாயி குலோத்துங்கன்,செங்குட்டுவன்,வேலு, சேத்தியாத்தோப்பு அரிமாசங்கதலைவர் அன்பழகன்,பொருளாளர் செயலாளர் மகாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.