உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 20, 2019

சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிநவ் ஆய்வு செய்தார்





சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிநவ் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு.இங்கு சேத்தியாத்தோப்பு,காட்டுமன்னார்கோவில்,புத்தூர், ஒரத்தூர்,ஸ்ரீமுஷ்ணம்,குமராட்சி,சோழத்தரம்,சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர்காவல் நிலையம் உள்ளிட்டவற்றின் காவல் உட்கோட்ட அலுவலகம் அமைந்துள்ளது.இதற்கு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் வருகை தந்தார்.அப்போது தற்போதைய உள்ளாட்சித்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.சேத்தியாத்தோப்பு உட்கோட்டப்பகுதிகளில் உள்ளாட்சித்தேர்தல் சுமூகமாகவும்,அமைதியாகவும் நடைபெறுவதற்கு பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கினார்.மேலும் இதனையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் அவர் வருடாந்திர துறைரீதியான ஆய்வுகளை மேற்கொண்டார்.அப்போது காவல் நிலையங்களின் ஆவணங்கள்,வழக்கு விபரங்கள்,மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியவிவரங்களை சரிபார்த்து ஆய்வுகளை மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியின்போது சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாஸ்,எஸ்ஐ மாணிக்ராஜ், ஒரத்தூர் எஸ்ஐ அபுஇப்ராஹிம்,காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜா, குமராட்சி காவல் ஆய்வாளர் வெற்றிவேல், சோழத்தரம் எஸ்ஐ இளையராஜா, அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஆக்னீஸ்மேரி, தனிப்பிரிவு ஏட்டுக்கள் வெங்கடகிருஷ்ணன்,கோவிந்த்,சிஜடி திருமுருகன் உள்ளிட்ட இந்த காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல்நிலையங்களின் நிலைய போலீசார் என ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.நிறைவாக ஆய்வுகளின் முடிவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டிஎஸ்பி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.