சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் நடப்பு கரும்பு அறவை துவக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழக அரசின் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை அமைந்துள்ளது.இந்த ஆலை கடந்த முப்பதாண்டுகளுக்கும்மேலாக இயங்கி வருகிறது.இப்பகுதியில் உள்ள சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில் சிறப்பாக இயங்கி வந்து கரும்பு விவசாயிகளுக்கு பயனளித்து வரும் இந்த ஆலையின் நடப்பு 2019&2020 ஆண்டின் கரும்பு அறவை துவக்க நிகழ்ச்சி ஆலையின் வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் தலைமை வகித்தார்.ஆலையின் ஆட்சியர் சாதனைகுறள் முன்னிலை வகித்தார்.பின்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அறவை துவக்கத்திற்கான சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.பின் எடைமேடையில் முதல் கரும்பு டிராக்டர் அளவு பார்க்கப்பட்டு பூஜைபோட்டு, பூசணிக்காய் உடைக்கப்பட்டு கரும்பு அறவைக்கு செல்லும் கன்வேயர்பெல்ட்டிற்கு கரும்பு டிராக்டர் வருகை தந்தது.இதனையடுத்து ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம்,ஆலையின் ஆட்சியர் சாதனைக்குரல் மற்றும் ஆலையின் நிர்வாககுழு உறுப்பினர்கள்,கரும்புவிவசாயிகள் என ஏராளமானவர்கள் ஆலையின் அறவைக்கு செல்லும் கன்வேயர்பெல்ட்டில் முதல் கரும்புத்துண்டுகளை தூக்கிப்போட்டு இந்தாண்டின் கரும்பு அறவையை துவக்கி வைத்தனர்.இதுகுறித்து ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் தெரிவிக்கும்போது தற்போதைய கரும்பு அறவைப்பருவத்தில் மூன்று லட்சம் டன் கரும்பு அறவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு மிகவிரைவாக தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின்படி கரும்புக்கான பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்பு உள்ள கரும்புவிவசாயிகளுக்கான நிலுவைத்தொகை ஏற்கெனவே கரும்புவிவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நல்லாதரவு அளித்து வரும் கரும்பு விவசாயிகளுக்கு இந்த நேரத்தில் கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அதிமுக நகரகழக செயலாளர் மணிக்கண்டன்,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் படடுகணேசன்,நன்மாறன்,ஆலையின் அனைத்து அதிகாரிகள்,பணியாளர்கள்,டிராக்டர் உரிமையாளர்கள்,ஏராளமான கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.இவ்வாறான சூழலில் ஆலை நிர்வாகத்தின் விரைவான பணப்பட்டுவாடா என்று உறுதி அளித்துள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.படம்&கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டின் கரும்பு அறவைப்பருவம் துவங்கியதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி.