புவனகிரி அருகே ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்து நெல் வயலில்
வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு.புவனகிரி அருகே கீரப்பாளையம் வட்டாரவேளாண்மை துறை சார்பில், கீரப்பாளையம், கண்ணங்குடி, ஆயிப்பேட்டை சாக்காங்குடி,ஒரத்தூர், சேத்தியாதோப்பு, நந்தீஸ்வர மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8000ஆயிரம் ஹெக்டேர்க்கு மேல் நடுவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பா நடவில்தற்போது ஆனைக்கொம்பன் ஈ, குருத்துப் பூச்சி தாக்குதல் அதிகளவில் உள்ளது. இது
குறித்து வேளாண்மைத்துறை கீரப்பாளையம் வட்டார வேளாண்மைை துணை அலுவலர் கோபி ,வேளாண்மை உதவி அலுவலர்கள் புகழேந்தி, வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள்
வயலில் நேரடி கள ஆய்வு செய்தனர். அப்போது பூச்சி தாக்குதல் செய்யப்பட்ட வயலில்நெல் பயிர்களை ஆராய்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்டநடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது தற்போது இந்த பூச்சி தாக்குதலானதுஅளவுக்கு மீறிய உரமிடல் மற்றும் பருவமழையில் அதிகளவு வயலில் தண்ணீர் தேங்கிநின்றதால் ஏற்பட்ட பாதிப்புகளாலும் இந்த பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதுஎனவும் தெரிவித்தனர். சம்பா நடுவில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுள்ள வயலில்அனைத்து விவசாயிகளும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்துகளைமட்டும் தெளித்து பயன்பெற வேண்டும். இதனால்் தற்போது நெல் வயலில் காணப்படும்பூச்சிி தாக்குதல் மறைந்து அதிகளவு மகசூல் தர முடியும் எனவும்
கூறினார்கள்.மேலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் காட்டும் வழிமுறைகளை சரியாகபின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.