உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, December 23, 2019

அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க பாடுபடுவோம் என அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு



கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ந்து ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன.இவற்றில் அதிமுக 9 இடங்களில் போட்டியிடுகிறது.இதனையடுத்து அதிமுகவின் கூட்டணிக்கட்சிகளான பாமக,தேமுதிக,தமாக உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் மற்ற 6 இடங்களில் போட்டியிடுகிறார்கள்.உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும்வேளையில் முதல்கட்டத்தில் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வருகிற 27ந்தேதி நடைபெறுகிறது.இதனால் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய வார்டு உறுப்பினர்க்கு போட்டியிடும் அதிமுகவினர் மிக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதன்படி புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வார்டு 10 ல்போட்டியிடும் அதிமுகவின் ஒன்றிய கழகசெயலாளர் சி.என்.சிவப்பிரகாசம் ஏராளமான தொண்டர்களுடன் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குகள் சேகரித்தார்.அப்போது கிராமத்தின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைவாக கிடைக்கவும் பாடுபடுவேன் என்று கூறி வாக்குகள் சேகரித்தார்.அதிமுக வேட்பாளரை உற்சாகமாக ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர்.இதேபோல் இந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற அதிமுக வேட்பாளர்கள், கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் ஓய்வில்லாமல் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.