புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதயநோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்.கடலூர் மாவட்டம் புவனகிரி வடட்டாட்சியர் அலுவலகத்தில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நம்ம புவனகிரி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய அனைவருக்குமான இருதயநோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நம்மபுவனகிரி அமைப்பின் நிறுவனர் இலியாஸ்பாஷா தலைமை வகித்தார். தேசிய மக்கள்நல மன்றம் மோகன்,நம்மபுவனகிரி அமைப்பு செயலாளர் கௌதமன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமை புவனகிரி வட்டாட்சியர் சத்யன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு தமிழ்சங்கம் ரகுவசந்தன் வரவேற்புரையாற்றினார்.பின்னர் நடைபெற்ற மருத்துவ முகாமில் இதயநோய்களுக்கான உயர்ரத்தஅழுத்தம், உடல்பருமன்,திடிரென உடல்வியர்த்தல்,கொழுப்புசத்து,மனஅழுத்தம் உடல்எடை, ரத்தத்தின் சர்க்கரை அளவு,உள்ளிட்ட இதயநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள்,மருந்துகள் உள்ளிட்ட பலவும் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த முகாமில் இருதயநோய் பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்படும்போது அவர்களுக்கு இருதயநோய்க்கான மருத்துவம், மற்றும் அறுவை சிகிச்சைகளான ஆஞ்சியோகிராம்,ஆஞ்சியோ பிளாஸ்டி பைபாஸ் சர்ஜரி, பலூன் வால்வு சர்ஜரி, மாரடைப்புக்கான சிகிச்சைகள் போன்றவை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.இம்முகாமில் புவனகிரி,கீரப்பாளையம்,மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்குமேற்பட்ட பயனாளிகள் வருகை தந்து தங்களுக்கான இதய நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்துகளையும் பெற்றுச்சென்றனர்.மருத்துவ முகாமில் மேலும் துரைமணிராஜன்,மோகன்தாஸ்,முகமதுரபீக்,லெனின் உள்ளிட்ட ஏராளமானவர்களும் இந்த முகாமில் பங்கேற்றனர்.
Saturday, December 7, 2019
புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதயநோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...