கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பிள்ளையார்தாங்கல் கிராமம்.பசுமையான வயல்வெளிகளைக்கொண்ட இக்கிராமத்தில் அதை ரசிக்க முடியாமல்போன ஒரு பெண்ணின் குரல் அனைவரையும் கட்டிப்போட்டு வருகிறது என்றால் அது இயற்கையின் ஆச்சர்யத்தில் ஒன்றுதான் என்றுதான் சொல்லவேண்டும்.பிள்ளையார் தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி.இவரின் மகள் ஷண்முகப்பிரியா(21).இவருக்கு பிறந்ததிலிருந்து பிறவி பார்வையில்லாதவர்.அதனால் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தனது மகளை திருச்சியில் படிக்கவைத்தார் சரஸ்வதி.ஆனால் ஷண்முகப்பிரியாவுக்கோ தனது தாயைவிட்டு பிரிய மனமில்லாததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு காட்டுமன்னார்கோவில் பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் தனது தாய் சரஸ்வதியுடன் வந்து தங்கி விட்டார்.ஆரம்பத்தில் தினமும் சாதாரணமாக பொழுதுகள் நகர்ந்தது ஷண்முகப்பிரியாவுக்கு.தொலைக்காட்சிகளில் திரைப்பாடல்களின் ஒலியைக்கேட்கும்போது அதை தனக்குள்ளாகவே மனதிற்குள் பாடிப்பார்த்தார்.அவ்வாறு பலமுறை மனதிற்குள்ளாக பாடிப்பாடி சுயமாக பயிற்சி எடுத்த ஷண்முகப்பிரியா மெல்ல மெல்ல அதை அழகாக யாருமற்ற நேரத்தில் பாடிப்பார்த்திருக்கிறார்.யதேச்சையாக ஒருநாள் இதைப்பார்த்த அவரது தாய் சரஸ்வதி மகளிடம் நீ நல்லா பாடுறேம்மா என்று பாராட்ட தாயின் அங்கீகரிப்பை உலகின் உயர்ந்த அவார்டாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பாடிப்பார்த்தார்.
ஒரு முறை தாயிடம் 80களில் வெளிவந்த பல பாடல்களை ஷண்முகப்பிரியா சொல்லி அதனை மெமரிக்கார்டில் பதிவு செய்து தரச்சொல்லியிருக்கிறார்.அவரும் அவ்வாரே செய்து தர அந்தப்பாடல்களை அப்படியே சாதாரணமெரிக்கார்டுபோடும் போனில் போட்டு கேட்டு வந்தார்.இவ்வாறு அவர் அடிக்கடி கேட்டு வந்தால் அவருக்கு அப்பாடல்கள் மனதிற்குள்ளாக வரிவரியாக அத்துப்படியாயின.பொழுபோக்காக பாடிப்பார்த்த ஷண்முகப்பிரியா தனக்கு பிடிக்கும்போதெல்லாம் பாடினார்.இவர் அழகாக துல்லியமாக ஒரிஜினல் பாடல் பாடியவரைப்போல் பாடியதைக்கேட்ட அவரது உறவினர் ஒருவர் அப்பாடலின் ஒன்றரை நிமிட வீடியோவை சமூவளைதலமான பேஸ்புக்கில் பதிவேற்றினார்.அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அப்பாடலானதுபலரது கவனத்தையும் ஈர்த்து குறைவானநேரத்தில் இருபதாயிரம் பேருக்குமேல் பார்க்கும்படியாக மாறியது.சமூக வளைதளத்தில் பரபரப்பான இந்த வீடியோவை அப்பகுதி செய்தியாளர்கள் கண்டறிந்து அவரைதேடிச்சென்று தங்கள் பங்குக்கு தொலைக்காட்சிகளிலும் அவரது குரல்வளத்தை வெளிக்கொண்டுவந்தார்கள்.இதனால் பலரின் மனம் கவர்ந்த பெண்ணாக மாறியுள்ள ஷண்முகப்பிரியாவுக்கு பலதரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.தனது மகளின் பாடும் திறமைப்பற்றி தாய் சரஸ்வதி கூறும்போது இவளுடன் இரண்டு அண்ணன்கள் உண்டு.இவளுக்கு இப்படியொரு நிலை என்று நான் என்றும் வருத்தமோ வேதனையோ பட்டது கிடையாது.கண்பார்வையை எடுத்துக்கொண்ட இயற்கை அதற்கு பதிலாக இந்த திறமையை கொடுத்திருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இவளின் எதிர்காலம் ஒன்றுதான் எனது உயிர்மூச்சு.எனக்கு என்று எந்த தனிப்பட்ட ஆசைகளும் கிடையாது.இவளது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றிட வேண்டும் என அந்த இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டார் ஷண்முகப்பிரியாவின் தாய் சரஸ்வதி.மேலும் எனது மகளின் எதிர்காலத்திற்கு தமிழக அரசு ஏதாவது உதவினால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.