கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் ஐயப்பா தர்மா பிரச்சார ரதயாத்திரை வருகை தந்தது.இதனை சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் முன்னாள் தலைவர், பாஜக கடலூர் மேற்குமாவட்ட செயலாளர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.கேரளாவிலிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 14 ஐயப்பா தர்மா பிரச்சார ரதயாத்திரை வந்துள்ளது.இந்நி நிலையில் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள இந்த ரதயாத்திரையானது கிராம தூய்மை, மக்கள் ஒற்றுமை, நீர்நிலை பாதுகாப்பு,குடும்ப மேன்மை, இந்துமத ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ரதயாத்திரை வலம் வருகிறது.சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சியில் பிரச்சார வாகனத்தில் இருந்த பஞ்சலோக ஐயப்பன் சிலை கீழே இறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.இதனையடுத்து ஐயப்பனுக்கு பால்,பன்னீர்,சந்தணம்,இளநீர்,விபூதி,நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள்,அலங்காரங்கள் நடைபெற்று பூஜை நடைபெற்றது.பின் முடிவில் மகாதீபாரதனை காட்டப்பட்டு அனைவருக்கும் ஐயப்பா தர்மா பிரச்சார ரதயாத்திரை பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் சேத்தியாத்தோப்பு நகரின் வணிகர்கள் மணிமாறன்,பாஜக நகரதலைவர் ஜெயக்குமார்,நகர பொதுச்செயலாளர் ராஜா , பாஜக கலை இலக்கிய அணி ராஜமோகன் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
Friday, November 8, 2019
சேத்தியாத்தோப்பில் ஐயப்பா தர்மா பிரச்சார ரதயாத்திரைக்கு வரவேற்பு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...