புவனகிரி அருகே மண்வள அட்டை மாதிரி கிராமத்தில் மத்தியகுழுவினர் ஆய்வு.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே புவனகிரி வட்டார வேளாண்மைத்துறைக்கு உட்பட்ட சீயப்பாடி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை திட்டத்தின்கீழ் மண்வள அட்டை மாதிரிகிராமமாக சீயப்பாடி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இக்கிராமத்தினை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்,வழிகாட்டல்படி அவர்களிடமிருந்து மண்வள அட்டைப்பெற்று அதன்படி தங்களது சம்பாநடவினை செய்துள்ளனர்.அதனால் மண்வள அட்டை மாதிரி கிராமமாக சீயப்பாடி கிராமம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.இந்தக்கிராமத்தை மத்தியகுழுவினர் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி கிராமத்தின் வயல்வெளியில் நடைபெற்றது.இதற்கு புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி தலைமை வகித்தார்.கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் ரமேஷ் மா.நி, வேளாண்மை அலுவலர் செந்தில் ம.தி,கடலூர் வேளாண்மை அலுவலர் மண்ஆய்வுக்கூடம் ஷோபனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் அலுவலர் ராஜராஜன் அனைவரையும் வரவேற்றார்.பின்னர் சீயப்பாடி கிராம விவசாயிகளிடம் புவனகிரி வேளாண்மைத்துறை சார்பில் பெறப்பட்ட மண்வள அட்டையின் அடிப்படையில் விவசாயிகள் சம்பாசாகுபடி செய்துள்ளது குறித்து மத்திய மண்வகையீடு நிலைப்பயன்பாட்டு துறை இயக்குனர் பங்கஜ்லகேட், பெங்களூரு உதவி இயக்குநர் சிவக்குமார்,பெங்களூரு மற்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உர ஆய்வாளர் பிரமோத் மாகூர் டெல்லி,ஆகியோர் அடஙகிய மத்திய கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்து மண்வள அட்டையின்படி பயிர்செய்வதால் உண்டாகும் நன்மைகள், அதனால் விவசாயிகளுக்கு எவ்வாறு அதிகப்பட்ச லாபம் கிடைக்கிறது என்பதான மண்வள அட்டை பயன்படுத்தி உரமிடுதல்,பயன்படுத்தாமல் உரமிடுதல் குறித்த செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.இதனையடுத்து பேசிய மத்தியகுழுவினர் மண்வள அட்டைப்பயன்படுத்தி உரமிட்டால் விவசாயிகளுக்கு உரச்செலவு குறையும்,அதிகம் லாபம் கிடைக்கும், மண்வளம் காக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
பின்பு விவசாயிகளுக்கு அறிவுறுத்திய மத்திய குழுவினர் மண்வள அட்டையை பயன்படுத்தி தாங்கள் செயல்படுவதை மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் மண்வள அட்டையின்படி பயிர் சாகுபடி செய்ய வலியுறுத்தும்போது ஒருங்கிணைந்து மண்வளம் காக்கப்பட்டு எதிர்காலசந்ததியினர் சிறப்பாக விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை நோய்,நொடிகளற்று அமைத்துக்கொள்ளமுடியும் என்றும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் சீ-யப்பாடி கிராம விவசாயிகளுடன் கிராமத்தின் இளைஞர்கள்,கிராமபொதுமக்கள் என பலரும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.இந்த மத்தியக்குழு ஆய்விற்கான விழா ஒருங்கிணைப்பை துணை வேளாண்மை அலுவலர் மணி ,உதவி வேளாண்மை அலுவலர்கள்,ஆட்மா திட்ட அலுவலர்கள்,பயிரி அறுவடை சோதனை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.