உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 6, 2019

புவனகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப்போட்டி






புவனகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப்போட்டி.கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.ஒருங்கிணைந்த கல்வி கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வியின் கீழ் இவ்விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.விளையாட்டுப்போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி துவக்கி வைத்தார்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்கோதை,உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல், வட்டார கல்வி அலுவலர்கள் ஜானகி,ஜாக்குலின்ரோசி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.நீளம் தாண்டுதல்,நின்ற இடத்தில் தாண்டுதல்,பந்து எறிதல்,100 மீட்டர் ஓட்டப்பந்தயம்,டென்னிஸ் பந்து எறிதல்,மற்றும் போஸ்கோ குழுவிளையாட்டு போட்டிகள் போன்றவைகள் நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள்,புவனகிரி வாசவி கிளப்,கடலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம்,ஆகியோர்களின் மூலம் நிதி  பங்களிப்பு பெற்று மாணவர்களுக்கான ஜூஸ், தேநீர்,பிஸ்கட்,சிற்றுண்டி,மதிய உணவு, சான்றிதழ்கள்,பரிசுப்பொருட்கள் என விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் மேலும் புவனகிரி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி,புவனகிரி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி,மஞ்சக்கொல்லை அரசு மேநிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள்.சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி,புவனகிரி நடுநிலைப்பள்ளி(மேற்கு),பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள்,சிறப்புடன் இந்த விளையாட்டுப்போட்டியை  நடத்தினார்கள்.சிறப்பு ஆசிரியர்கள் யோகேஸ்வரி,நீலா,புஷ்பலதா,மற்றும் இயன்முறை மருத்துவர் சிந்துஜா,உள்ளிட்டவர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்னர்.முடிவில் சிறப்பு ஆசிரியர் யோகேஸ்வரி நன்றி கூறினார்.
படம்&கடலூர் மாவட்டம் புவனகிரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி புவனகிரி அரசு --ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.