சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமம் உள்ளது.இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன வசக்டமி சிறப்பு கருத்தடை முகாம் நடைபெற்றது.கடலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணைஇயக்குநர்சுகாதராப்பணிகள் உத்தரவுப்படி ,கடலூர் மாவட்ட மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் அரவிந்த்பாபு ஆலோனையின்படி ,ஒரத்தூர் அரசு மருத்துவ மனை வட்டார மருத்துவ அலுவலர் ஆண்டனிராஜ் இந்த மருத்துவ முகாமில் தலைமை வகித்தார்.பின்னர் நடைபெற்ற முகாமில் ஆண்களுக்கு தழும்பில்லா வாசக்டமி சிறப்பு கருத்தடை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட நான்கு ஆண்களில் ஒருவருக்கு நவீன வாசக்டமி தழும்பில்லா கருத்தடை சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த கருத்தடை சிகிச்சையானது விருத்தாசலம் அரசு மருத்துவ மனையிலிருந்து வருகைதந்த சிறப்பு மருத்துவரான மணிவண்ணனால் நவீன வாசக்டமி சி செய்யப்பட்டது.இந்த சிறப்பு மருத்துவ முகாமானது 21&11&2019 லிருந்து தொடர்ந்து வருகின்ற 04&12&2019 வரை நடைபெறுகின்றது. இம்முகாமானது வாசக்மி கருத்தடை குறித்து கிராமபுறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொறுட்டு கடலூர் மாவட்ட குடும்பநலச்செயலகத்திலிருந்து வருகை தந்த நவீன வாசக்டமி விழிப்புணர்வு வாகனத்தை வட்டார மருத்துவ அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த சிறப்பு முகாமில் ஒரத்தூர் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் சிபி,கடலூர் மாவட்ட குடும்பநலச்செயலகத்தின் வட்டார சுகாதார புள்ளியிலாளர் கிருஷ்ணராஜா,ஒரத்தூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தின் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பு ராஜமோகன்,சமுதாயநலசெவிலியர் ராணி,வட்டார சுகாதாரபுள்ளியலாளர் சுகுமார்,வட்டார சுகா£தார நிலையத்தின் வட்டார சுகாதார ஆய்வாளர்கள்,செவிலியர்கள்,
,செவிலியர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.