சேத்தியாத்தோப்பு அரசுப்பள்ளியில் பெண்களுக்கான பொது மருத்துவ முகாம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், பாண்டிச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனை ஆகியவை இணைந்து பெண்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தின. இம்முகாமில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் மணிமாறன்,துணை தலைவர் செங்குட்டுவன்,பொருளாளர் மகாகிருஷ்ணன்,சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற பொதுமருத்துவ முகாமில் பெண்களுக்கான இதயநோய்,கல்லீரல்,கழுத்துவலி,இடுப்பு வலி,தோல்நோய் பிரச்னைகள்,உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு இலவச மருந்துகளும் தரப்பட்டது.மேலும் இம்மருத்துவ முகாமில் அரிமா சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் சண்முகம்,அரிமா சங்க வட்டார தலைவர் சாமூண்டீஸ்வரி,தில்லை உள்ளிட்ட பலரும் மருத்து முகாமில் பங்கேற்றனர்.இந்த மருத்துவ முகாமிற்கு சேத்தியாத்தோப்பு,பின்னலூர்,அள்ளூர்,குமாரக்குடி, வடப்பாக்கம்,வெள்ளியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் வந்திருந்து பங்கேற்றனர்.மருத்துவ முகாமில் பலர் இலவச மேல்சிகிச்சைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.இம்முகாமில் மொத்தம் 168 பெண் பயனாளிகள் வருகை தந்து தங்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்தனர்..
Saturday, November 23, 2019
சேத்தியாத்தோப்பு அரசுப்பள்ளியில் பெண்களுக்கான பொது மருத்துவ முகாம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...