உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, November 22, 2019

புவனகிரி அருகே சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளிக்கட்டிடம்



புவனகிரி அருகே சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளிக்கட்டிடம்.கடலூர் மாவட்டம் புவனகிரி அ-ருகே தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமம்உள்ளது.இக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் 85 மாணவர்களுக்குமேல் படித்து வருகிறார்கள்.இவர்களுக்கான பள்ளிக்கட்டிமானது பழுதடைந்துள்ளது என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து கிராமமக்களின் கோரிக்கையை ஏற்ற சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் உடனடியாக தனது தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சத்தை ஒதுக்கி அரசுதொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அனுமதியளித்தார்.இதனையடுத்து புதிய பள்ளிக்கட்டிடத்திற்கு பூமிபூஜை போடப்பட்டு பள்ளி கட்டுமான பணிகள் கடந்த சிலமாதங்களாக நடைபெற்று வந்தது.இவ்வாறான நிலையில் பள்ளியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன.இதனையடுத்து பள்ளிக்கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்தார்.அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லூர்துமேரி செல்லம்மாள் அனைவரையும் வரவேற்றார்.வட்டார கல்வி அலுவலர் நடராஜன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம்,அதிமுக ஊராட்சிகழக செயலர் ஜெயசீலன்,செழியன்,சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவர் விநாயகமூர்த்தி,பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி வட்டார ஊராட்சி சிவஞானசுந்தரம்,கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி  அதிகாரி அசோக்பாபு,உதவி பொறியாளர்கள் கிருஷ்ணகுமார்,பெரியசாமி,பள்ளியின் உதவி ஆசிரியர்கள் விக்டோரியா ஞானசௌந்தரி, உள்ளிட்டவர்கள், மற்றும் ஏராளமான அதிமுகனவிரும் அரசு தொடக்கப்பள்ளி விழாவில் பங்கேற்றனர்.
படம்&2 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினம்கிராமத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து 15லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டி திறப்புவிழா நடைபெற்றது.