உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, November 22, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் கழிவறை வசதிகேட்டு கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை


சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் கழிவறை வசதி கேட்டு கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பெரியநெற்குணம் கிராமம்.இக்கி8ராமத்தில் முத்துமாரியம்மன்கோவில் தெருவில் இருநூறுக்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்களது கிராமத்திற்கு நீண்டநாட்களாக தனிக்கழிவறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.இதனால் பொதுக்கிராம சுகாதாரம் பாதிப்படைவதாகவும், தொற்றுநோய் ஏற்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள்.பொதுமக்கள் தெருக்களில் நடந்துசெல்வதற்கே அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.இதுகுறித்து  கிராமமக்கள் தெரிவிக்கும்போது பெரியநெற்குணம் கிராமத்தில் முத்துமாரியம்மன்கோவில் தெருவில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள்.இவர்களுக்கான கழிவறை வசதி இல்லாததால் பொது சுகாதாரம் சீர்கேடு அடைந்து சுற்றுப்புற பாதிப்படைகிறது.கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை இருந்து வருகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படுவதோடு பலருக்கும் காய்ச்சல் இருந்து வேதனைப்படுத்தி வருகிறது.மேலும் கிராமத்தில் வடிகால் வசதியில்லாமல்போனதால் மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கியே உள்ளது.இதனால் கொசுத்தொல்லை,டெங்குநோய் பாதிப்பும் ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பெரியநெற்குணம் கிராமத்தில் முத்துமாரியம்மன்கோவில் தெருவில் நேரடியாக ஆய்வு செய்து அனைவருக்கும் தனிகழிவறை வசதி மற்றும் பொதுக்கழிவறை, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவற்றை செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.