குறிஞ்சிப்பாடி அருகே கிபி.17 ஆம் நூற்றாண்டுக்குபிறகு புத்துயிர்பெற்ற புலியூர் ஸ்ரீஆதிதவபுரீஸ்வரர் சிவன்கோவில் முதல் மகாகும்பாபிஷேகம்.கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது புலியூர் கிராமம்.இக்கிராமத்தில் கிபி 17ஆம் நூற்றாண்டில் சிறப்பு மிக்கதாக விளங்கி வந்த சோழர்கால சிவன்கோவில் ஒன்று படையெடுப்புகளால் மண்ணோடு மண்ணாக மக்கி தரைமட்டமானது.அப்போது கோவிலில் இருந்த மூலவர் சிவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு தெய்வ சிலைகள் மண்ணில் புதையுண்டுபோயின.இந்நிலையில் அவ்வாறு புலியூர் கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் மண்ணில் புதையுண்ட தெய்வ சிலைகளில் சிவலிங்கம் ஒன்று தானாக வெளிவந்து மரத்தடியில் நீண்டகாலமாக இருந்து வந்தது.இதனை அவ்வூர் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து ஆலயம் அமைத்து அதற்கு கோவில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்தனர். அதன்படி அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் பணிகள் நிறைவுற்றபின் அக்கோவிலுக்கு முதல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலின் மூலவருக்கு ஸ்ரீ ஆதி தவபுரீஸ்வரர் உடல் உரை ஸ்ரீ பெரியநாயகி சமஸ்தி என்று பெயர்சூட்டல் நிகழ்வு நடைபெற்றது.பிறகு இதனுடன், ஸ்ரீ லட்சுமி நாராயணர் ஆகிய தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.முதல் காலபூஜை காலை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், என யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு பல்வேறு பூஜைகள் என நான்கு கால பூஜை நடைபெற்றது. இதன்பிறகு மகா ஹோமம், மகா தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று புனிதநீர்கலசம் கோவில் கோபுரத்தின் மேல் கொண்டுசெல்லப்பட்டு கோவில் கலசத்தின்மேல் புனிதநீர் ஊற்றப்பட்டு ஸ்ரீஆதிதவபுரீஸ்வரர் சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.படையெடுப்புகளால் மண்ணோடு மண்ணாக தரைமட்டமான சிவன்கோவில் ஒன்று மீண்டும் உயிர்பெற்றிருப்பதை பக்தியோடு பல ஊர்களிலிருந்தும் ஏராளமானவர்கள் வருகைதந்து ஸ்ரீஆதிதவபுரீஸ்வரரை வணங்கிச்செல்கிறார்கள்.
Monday, November 11, 2019
குறிஞ்சிப்பாடி அருகே கிபி.17ஆம் நூற்றாண்டுக்கு பிறகு புத்துயிர்பெற்ற புலியூர் ஸ்ரீஆதிதவபுரீஸ்வரர் சிவன் கோவில் முதல் மகா கும்பாபிஷேகம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...