உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 2, 2019

சேத்தியாத்தோப்பு அருகே சீயாப்பாடி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் முப்பெரும் விழா






கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சீயாப்பாடி கிராமம்.இக்கிராமத்தில் புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை சார்பில்  முப்பெரும் விழா நடைபெற்றது.சீயப்பாடி கிராமத்தில் இருநூறு ஏக்கருக்குமேல் விவசாயிகள் சம்பாநடவினை மேற்கொண்டுள்ளனர்.அவ்வாறு சம்பா நடவில் நடப்பட்டுள்ள நடவுபயிர்கள் நன்றாக செழிப்பாக வளர்ந்துள்ளன.இந்நிலையில் இந்தக்கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு மண் வள அட்டை செயல்விளக்க இடுபொருட்கள் வழங்கல்,சம்பா திட்டத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிரதமந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் புதிய நபர்கள் சேர்த்தல் மற்றும் அவர்களின் வங்கிக்கணக்கு எண் சரிசெய்தல் என முப்பெரும் விழா நடைபெற்றது.இதனை கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மத்தியதிட்டம் வேல்விழி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.மேல்புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி முன்னிலை வகித்தார்.
தொழில்நுட்பு உரையை கடலூர் வேளாண்மை அலுவலர் அகிலா வழங்கினார்.மேல்புவனகிரி வட்டார வேளாண்மை அலுவலர் ராஜராஜன் அனைவரையும் வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.விவசாயிகள் உரமிடவேண்டுமென்றால் மண்வள அட்டையில் உள்ளபடிதான் உரமிடவேண்டும் அப்போதுததான் உரச்செலவு குறைந்து உழைப்புக்கேற்ற பலன் பெறமுடியும் என அறிவுறுத்தல்களை வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு வ-ழங்கினார்கள். தேவையான இடுபொருட்களை நெல்பயிர்களுக்கு இடுவது குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இந்த  சம்பாநடவு செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தவறாமல் தங்களது நெற்பயிர்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து காத்திட  பயிர்காப்பீடு செய்வதின் அவசியத்தால் உரிய இழப்பின்போது சரியான உதவியை பெறமுடியும் அதனால் ஒரு ஏக்கருக்கு 447 பிரிமியத்தொகையினை முன்மொ-ழிவு படிவம்,பதிவு விண்ணப்பம்,ஆதார் அட்டை நகல்,சிட்டா,அடங்கல்,வங்கிகணக்கு முதல்பக்கம், ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,பொது சேவை மையம் என ஏதாவது ஒன்றில் தங்களுடைய பயிர்காப்பீட்டை செய்துகொள்ளவேண்டும்.








பயிர்காப்பீடு செய்ய இம்மாதம் 30ந்தேதி கடைசி என்றும் விவசாயிகளுக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.மேலும் ,பிரதமந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் புதிய நபர்கள் சேர்த்தல்படி தகுந்த பயனுள்ள விவசாயிகள் சரியாண ஆவணங்களுடன் அருகிலுள்ள வேளாண் அலுவரையோ அல்லது பொது சேவை மையத்தையோ தொடர்புகொள்ளவேண்டும். மற்றும்  பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதநிலையில் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கிகணக்கு புத்தகத்துடன் அருகிலுள்ள தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் சிங்காரமூர்த்தி,செந்தில், சந்தானகிருஷ்ணன்,இளையராஜா அட்மாதிட்ட அலுவலர்கள் உள்ளிட்ட சீயப்பாடி கிராமத்தினை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இவ்விழாவில்  பங்கேற்று பயன்பெற்றனர்.