கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே காவலக் குடி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து கிராமத்தின் வளர்ச்சி என்பதையே நோக்கமாகக் கொண்டு காக்கும் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பை துவக்கி உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் கிராமத்தின் அடிப்படை கட்டமைப்புக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை அவர்கள் தங்களது சுய பொருளாதாரத்தில் செய்து வருகிறார்கள்.காவலக்குடி கிராமத்திற்கு காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் நடுதல், கிராம தூய்மை, கிராம மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தற்போது இக்கிராமம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கடலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, காவலாக்குடி காக்கும் கரங்கள் சேவை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்த கண் சிகிச்சை முகாம் காவாலக்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடத்தினார்கள். இந்த கண் சிகிச்சை முகாமில் பார்வை குறைபாடு கண்ணில் நீர் வடிதல் கண் அழுத்தம் கண் அறுவை சிகிச்சை கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகளும் மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.இந்த கண்சிகிச்சை மருத்துவ முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வருகைதந்து தங்களுக்கான கண் சம்பந்தமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டு பயன் பெற்றனர்.
Wednesday, November 13, 2019
கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...