புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புவனகிரி பேரூராட்சி சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்.கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பேரூராட்சியில் டெங்குநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார்.புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ரவி,புவனகிரி பேரூராட்சி இளநிலை உதவியாளர் செந்தில்குமார்,வேல்முருகன்,
சுகாதார ஆய்வாளர் தனசேகரன்,லஷ்மண்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள்,அதன்பணியாளர்கள் என எழுநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியில் புவனகிரி அரசு மருத்துவமனை,பேரூராட்சியினை சேர்ந்த ராஜ்குமார்,ராசு உள்ளிட்ட பணியாளர்களும் கலந்துகொண்டனர்.இதுபோல் புவனகிரி பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் சார்பில் அனைத்து வார்டுகளிலும் டெங்குநோய் எதிர்ப்பு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.