உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 6, 2019

சேத்தியாத்தோப்பு அருகே செங்கல்மேடு கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகள் இணைந்த ஆலோசனைக்கூட்டம்







சேத்தியாத்தோப்பு அருகே செங்கல்மேடு கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறைக்கு உட்பட்ட செங்கல்மேடு கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு,மற்றும வழக்கமான நெல்டவு என சம்பா நடவினை செய்துள்ளனர்.அவ்வாறு பயிர்செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன.இவ்வாறான நிலையில் அப்பயிர்களை கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மத்தியதிட்டம் வேல்விழி தலைமை வகித்தார். கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பிரேமலதா,வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் மூன்றாவது தவணை பணம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.இதில் சிலருக்கும் இன்னமும் பணம் கிடைக்காமல் அவர்களது வங்கிக்கணக்கில் ஏறவில்லை என  கூறியதின் அடிப்படையில் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண் ,மற்றும் வங்கி கணக்குபுத்தகம் ஆகியவற்றை எடுத்துவந்து அதனை சரிபார்க்கும்முகாம் நடைபெற்றது.மேலும் இந்த திட்டத்தில் புதியதாக இணைய உள்ள விவசாயிகள் அதற்கான விண்ணப்த்தை எடுத்துவந்து சேர்ப்பதற்கான முகாமும் எனவும் இந்த ஆலோசனைக்கூட்டமும் இடம்பெற்றது.இதில் புதியதாக இணைய உள்ள விவசாயிகள் எந்த ஒரு அரசு பதவியிலும் இருக்க கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகளை தவிர்த்து தகுதியுள்ள அனைவரும் இந்த திட்டத்தில் புதியதாக சேர்க்கப்படுகிறார்கள்.மேலும் தற்போதைய சம்பா நெல்பயிரில் பூச்சித்தாக்குதல் தவிர்த்து அதிக மகசூல் பெறுவது குறித்த வழிமுறைகளையும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் செங்கல்மேடு விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சியில் கீரப்பாளையம் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுலர்கள் விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.