உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 28, 2019

சோழத்தரம் காவல் நிலையம் அருகில் வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் காவல் நிலையம் அருகில் வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள சோழத்தரம் காவல் நிலையம் அருகில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.இதனையடுத்து விரைந்து வந்த சோழத்தரம் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது போலீசாரின் விசாரணையில் சாலையில் இறந்து கிடந்தவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தின் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அம்பலவாணன் மகன் மணிவேல்(34)என்பது தெரியவந்தது.இதன்பின்பு அவரின் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டது.இந்நிலையில் கோதண்டவிளாகம் கிராமத்திலிருந்து மணிவேல் தனது மனைவியின் சொந்த ஊரான மாமங்கலம் கிராமத்திற்கு அவரை பார்த்துவிட்டு திரும்பும்போது இந்த கோரவிபத்து நடந்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.பின்பு கோதண்டவிளாகம் கிராமத்தில் சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்  இறந்த மணிவேல் மனைவி விமலாதேவி தலைமையில் கோதண்டவிளாகம் -முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெகஜானந்தன்,விசிக தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேந்தன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் நூற்றுக்குமேற்பட்ட கிராமமக்கள் இறந்த மணிவேலின் உறவினர்கள் ஆகியோர் விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீமுஷணம் காவல் ஆய்வாளர் ஷாகுல் ஹமீது போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்,அதன்படி விபத்து ஏற்படுத்தியவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அதனால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.இதன்படி காவல் ஆய்வாளரின் கோரிக்கையை ஏற்ற சாலைமறியல் செய்தவர்கள் உடனடியாக கலைந்து சென்றனர்.பின்பு சாலையில் அரை மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசலை சோழத்தரம் போலீஸ் எஸ்ஐ இளையராஜா,அண்ணாமலை,மணிமாறன் உள்ளிட்ட போலீசார் சரிசெய்யும் பணியில்  ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.