உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 28, 2019

சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியைச்சேர்ந்தவர் விபத்தில் பரிதாப உயிரிழப்பு

சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியைச்சேர்ந்தவர் பரிதாப உயிரிழப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியைச்சேர்ந்தவர் செல்வம்.இவர் சேத்தியாத்தோப்பில் இனிப்புக்கடை நடத்தி வருகிறார்.இவரது இளையமகன் பசுபதி(24) என்பவர் நேற்று இரவு சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தில் இருசக்கர வாகனத்தில் தனது உறவினரைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது இவரின் வாகனத்திற்கு முன்னால் நடந்து சென்றவர் மீது எதிர்பாராமல் அவர் ஓட்டி வந்த வாகனம் மோதியது.இதில் நிலை தடுமாறிய பசுபதி பழையபாலத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு கிழக்குபக்கத்தில் ஐம்பது அடி ஆழமுள்ள தரைத்தளத்தில் விழுந்தார்.இதனையடுத்து சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை அதிகாரிகள்,சேத்தியாத்தோப்பு போலீசார் ஆகியோர் விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலமாக அடிபட்டு கிடந்த பசுபதியை விரைவாக மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பசுபதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரித்தனர்.இதனையடுத்து புகாரின்பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கும்போது தற்போது பழையபாலத்தில் கிழக்கு பகுதி தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால் இந்த விபத்து நடந்துள்ளது.சாலைக்கும் தடுப்புச்சுவருக்கும் உள்ள உயரம் குறைந்தபட்சம் ஐந்தடி உயரம் இருக்கவேண்டும்.ஆனால் தற்போது ஒரு அடிக்கும் குறைவாக தடுப்புச்சுவர் இருப்பதால் இந்த விபத்து நடந்துள்ளது.அதிகாரிகள் இந்த பழைய பாலத்தில் தடுப்புச்சுவற்றின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்படாது என்றும் அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.ஏனெனில் சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தில் தற்போது பொதுமக்கள் நடந்து செல்வதும்,வாகன ஓட்டிகள் அதிகமாக செல்வதும் அதிகமாக உள்ளதால் அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.