உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, October 18, 2019

சேத்தியாத்தோப்பு டிஜிஎம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி தீயணைப்புத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி






கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் டிஜிஎம் பள்ளியில் மாணவர்களிடையே விபத்தில்லாமல் தீபாவளியைக்கொண்டாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான தீயணைப்புக்குழுவினர் பங்கேற்றனர்.பள்ளிமாணவர்களுக்கு வருகின்ற தீபாவளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடும்போது விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.எதிர்பாராமல் பட்டாசு வெடிக்கும்போது செய்யவேண்டிய முதலுதவி அறிவுறுத்தல்களையும் கூறினர்.மேலும் பட்டாசு வெடிக்கும்போது யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமலும்,எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களின் அருகில் இல்லாமல்,அதுபோன்ற ஆடைகளை தவிர்த்தும் பட்டாசு வெடிக்கவேண்டும்.அனைவரும் தவறாமல் அருகிலுள்ள தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்ணை தெரிந்துக்கொண்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்போது தகவல் அளிக்கவேண்டும் எனவும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.மேலும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது குறித்த துண்டுபிரசுரங்களும் மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.