உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, October 18, 2019

சேத்தியாத்தோப்பு அருகே வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி கட்டுமானப்பணியை ககன்தீப்சிங் திடிர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு அருகே வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி கட்டுமானப்பணியை ககன்தீப்சிங் திடிர் ஆய்வு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம்.இக்கிராமத்தில் புவனகிரி,பரங்கிப்பேட்டை,கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில்,குமராட்சி உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களை சேர்ந்த ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைந்து வீரநாரயாணன் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.இந்த நிறுவனத்தின் மூலம் தரமான விதைகள்,மற்றும் பல்வேறு வகையான விவசாய பொருட்கள் தரமாக விவசாயிகளுக்கு வழங்கிடும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு அறுபது லட்சரூபாய் முழுமானியத்தில் நிதி ஒதுக்கியுள்ளது.இந்த நிதி மற்றும் இதிலுள்ள ஆயிரம் விவசாயிகள் தங்களது பங்குத்தொகை என உள்ள அனைத்து தொகையையும் சேர்த்து இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதன்படி இந்நிறுவனத்திற்கு தற்போது புதியக்கட்டிடம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிறுவனத்தின் கட்டுமானப்பணியை  கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி திடிரென்று நேரில் வருகைதந்து ஆய்வு செய்தார்.அப்போது விழுப்புரம்,கடலூர் ஆகியமண்டலங்களைச்சேர்ந்த மற்றும் மேற்கண்ட ஐந்து ஒன்றியங்களைசேர்ந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி,மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர்கொண்ட குழுவினருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.வரவேற்பின் முதலில் ககன்தீப்சிங்பேடி,அன்புச்செல்வன் ஆகியோருக்கு பனைவிதைகள் அளிக்கப்பட்டு அவைகள் நடப்பட்டது.இதனையடுத்து வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் கட்டுமானப்பணியை பார்வையிட்டார்.மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.தமிழக அரசு விவசாயிகளுக்கு  வழங்கியிருக்கின்ற நல்ல வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடைபெற்று வரும் இந்நிறுவனம் மேன்மேலும் வளர்ந்து சிறப்படைய தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார் ககன்தீப்சிங்பேடி.இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் தங்களுக்கு அரசு வழங்குகின்ற உதவிகளுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றி எனவும்,தொடர்ந்து தங்களுக்கு தமிழக அரசும்,வேளாண்மைதுறை அதிகாரிகள் சரியான வழிக்காட்டல்களை வழங்கி வருவதையும் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மைதுறை அதிகாரிகள் ஜேடிமுருகன்,பொறியாளர் பழனிவேல்,தோட்டக்கலைத்துறை ராஜாமணி,வேளாண்துணை இயக்குநர்,வேளாண் வணிகம் ஜெயக்குமார்,வேளாண்மை அலுவலர் வேளாண்வணிகம் அமுதா,புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி,வேளாண் அலுவர் உழவர்சந்தை ஆறுமுகம், உதவிவேளாண்அலுவலர் பரங்கிப்பேட்டை மணிமாறன், ஆறுமுகம்,இளவரசி,லோகநாதன்,திருமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன்,துணை தலைவர் வாக்கூர் முருகன்,இயக்குநர்கள் அகரஆலம்பாடி வேல்முருகன்,முட்லூர் விஜயகுமார்,பூந்தோட்டம் கபிலன்,தரசூர் சிங்காரவேலன்,காட்டுமன்னார்கோவில் அனுரேகா,சிறுகாட்டூர் ராஜேந்திரன்,குமராட்சி அக்ரிராஜேந்திரன்,மேலநெடும்பூர் ரெங்கநாயகி,தச்சக்காடு குமார், உள்ளிட்ட விவசாயிகள்,வேளாண்மைதுறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.