உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 28, 2019

சேத்தியாத்தோப்பு அருகே வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயல்வெளிகளில் நேரடி ஆய்வு



சேத்தியாத்தோப்பு அருகே வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயல்வெளிகளில் நேரடி ஆய்வு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வலசக்காடு கிராமம்.இக்கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நடவு நெல் பயிரிடப்பட்டுள்ளது.அவ்வாறு பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன.இவ்வாறான சூழலில் இவ்வாறு உள்ள சம்பா நெல்நடவு வயல்களை வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் பாசன வேளாண்மை நவீனமயாக்கும் திட்டத்தின்கீழ் உயர்விளைச்சல் செயல்விளக்கதிடல் கூடுதல்  இயக்குநர் ஐயம்பாம் சென்னை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் இயந்திர நெல் நடவு, வரப்பில் உளுந்து பயிர் விளைவித்தல்,களை எடுக்கும் கருவி செயல்விளக்கம் போன்றவற்றினைப்பற்றி விவசாயிகளிடம் அதிகாரிகளிடம் கலந்துரையாடினர்.இந்த ஆய்வின்போது கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் முருகன், கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் ரமேஷ்,வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமலதா ஆகியோருடன் அப்பகுதி விவசாயிகளும் உடனிருந்தனர்.