உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 7, 2018

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின்சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி.தமிழக அடுத்தமாதம் முதல் மண்ணுக்கும்,மனிதர்களுக்கும் தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் தடைசெய்ய ஏற்கெனவே அரசாணை வெளியிட்டது.அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் அதனை பயன்பபகடலூருக்கு மணல் ஏற்றிச்செல்லப்பட்டிருப்பதாக அதன் ஓட்டுநர் ராஜா தெரிவித்துள்ளார்.இதற்கு பின் அதனை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள்குறித்து பொதுமக்கள் இல்லங்களுக்கே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.பிளாஸ்டிக் பயன் பாட்டை குறைக்கும்போது அதனால் சுற்றுப்புற சீர்கேடு பாதிப்படைவது தடுக்கப்படுகிறது.மற்றும், அதிகளவில் குப்பைகள் சேர்ந்து பயங்கரமான உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும் நிலையும் மாறும்.இதன்படி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின்பேரில் பேரூராட்சிகளின் இணைஇயக்குநர் அறிவுறுத்தலின்படி சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்து நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் மகாராஜன்,செயலாளர் ஆனந்தன்,கிட்டு,கிஷோர்குமார்,செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியானது பிளாஸ்டிக் ஒழிப்பு கோஷங்களோடு சேத்தியாத்தோப்பு முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்திற்கு திரும்பியது.மேலும் சௌந்தரராஜன்,தில்லை,மணிவண்ணன்,அன்பழகன், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்,பள்ளி மாணவர்கள் ,பேரூராட்சி அலுவலர்கள் ,சுகாதார ஆய்வாளர் செல்வம்என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.